பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலம்புரியும் கிண்கிணியும் 'அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும் எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி னாலும் கண்ணினால் அடங்காதுன்னிற் கருத்தினால் அடங்கா தென்பால் நண்ணினான் அமருக் கென்கை அருளென நாட்ட லாமே” என்று சொல்கிறார் கச்சியப்பர். சிறிதும் ஐயம் இல்லாமல் துணிவாகச் சொல்கிறான் என்பதைப் புலப்படுத்த, 'நாட்ட லாமே” என்ற சொல்லை இங்கே அமைக்கிறார். அறுமுகன் ஆடல் முருகப்பெருமான் வள்ளிநாயகியிடம் காதல் கொண்டான். அதுவும் ஒரு வகையான திருவிளையாடல்தான். உலகில் மக்கள் காமத்தினால் துன்புறுகின்ற நிலை அன்று அது. ஆண் பெண் உறவுக்கு முன்னாலே காதல் வயப்பட்டுத் துன்புறுகிற நிலைக் கும் இதற்கும் வேறுபாடு உண்டு. முருகப்பெருமான் வள்ளியம் பெருமாட்டியை ஆட்கொள்வதற்காக வேண்டி விளையாடினான். அதனைக் கச்சியப்ப சிவாசாரியார் அறுமுகன் ஆடல்' என்று சொல்வார். 'உலைப்படும் மெழுக தென்ன உருகியே ஒருத்தி காதல் வலைப்படு கின்றான் போல மறுகியே மாழ்கி நின்றான் கலைப்படு மதியப் புத்தேள் கலங்கலம் புனலில் தோன்றி அலைப்படு செய்கை யன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.” பெருமான் செய்கின்ற அத்தனையும் திருவிளையாடல்கள். விளையாட்டில் ஈடுபடுபவன் குழந்தை. குழந்தை எது செய் தாலும் அதனை விளையாட்டு என்றே சொல்வார்கள். ஆகவே உருவத்தாலும் குழந்தைத் திருமேனி கொண்ட எம்பெருமான் செய்யும் அத்தனையும் விளையாடல்களே என்பதில் சற்றும் ஐயமில்லை. திண்கிரிகள் எல்லாம் சிந்த விளையாடுகின்ற முருகன் அந்த விளையாட்டினால் அடியார்களுக்கு நலமே செய்தான். இந்திராதி தேவர்கள் முதலில் அஞ்சினாலும், அவன் பெரு வீரம் உடைய க.சொ.V1-14 213