பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல் வேட்கை நிற்கிறது. அந்த ஆசையும் மண், பெண், பொன் என்று மூன்று வகைப்படும். இந்த மூன்று ஆசைகளிலும் மிக விரிவாக, ஆழப் படர்ந்து நிற்கும் ஆசை புெண்ணாசை பெண்ணாசையினால் துன்புறுகிறவர்கள் எல்லாக் காலத்தும் இருக்கிறார்கள். எப்போ தெல்லாம் தவம் குறைகிறதோ, மக்களுக்கு மன வலிமை குறைகிறதோ, அப்போதெல்லாம் அந்த ஆசை மீதூர்ந்து நிற்கும். பெரிய இதிகாசங்களில் வருகிற கேடுகளுக்கு மூல காரணம் காமமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். மனிதனைப் பீடிக்கும் அக நோய்களுக்குள் காமம் மிகமிக வலிமையானது; பெரும் பாலானவர்களைப் பிடிக்கும் வியாதி அது. அருணகிரியார் மக்களிடம் உள்ள தீய குணங்களை மாற்று வதற்குரிய பரிகாரங்களை அங்கங்கே சொல்கிறார். ஒவ்வொன் றையும் பற்றித் தனித்தனியே சொன்னாலும் பெரிய நோயாகிய காமத்தைப் பற்றி அடிக்கடி சொல்கிறார்; மிகுதியாகச் சொல் கிறார். அப்படி மிகுதியாகச் சொல்வதற்குக் காரணம் அந்தத் தீய குணமே பெரும்பாலோரிடம் ஆழமாகப் பதிந்து இருப்பதுதான். அவர் பாடிய திருப்புகழ் முதலிய நூல்களிலுள்ள பாடல்களைக் கணக்கு எடுத்துப் பார்த்தால் காம நோய் பற்றியனவே மிகுதியாக இருப்பதைக் காணலாம். மக்களிடத்தில் கருணை கொண்ட மனத்தவர் ஆகையால், எந்த நோய் மிகுதியாக இருக்கிறதோ அதைப் பற்றி மிகுதியாகக் கண்டிக்கும் இயல்பு அவரிடம் இருந்தது. கால நிலை அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில் பெரிய மன்னர் யாரும் இல்லை. அங்கங்கே குறுநில மன்னர்கள் இருந்தார்கள். அவர் களுக்கு வரையறையான ஒழுக்கம் இல்லை. தங்களுக்குக் கிடைத்த பொருளைக் கொண்டு இந்த வாழ்வில் பெறுவதற்குரியது காம இன்பம் ஒன்றுதான் என்று எண்ணி அதில் ஈடுபட்டிருந்தார்கள். அதனால் எங்கே பார்த்தாலும் காமக் கேளிக்கைகளும், அதனைப் பாராட்டும் முயற்சிகளுமே நிறைந்திருந்தன. அந்தக் காலத்தில் பலவகையான பிரபந்தங்கள் காமத்தை உண்டாக்கும் முறையில் எழுந்தன. சிற்றரசர்கள் அப்படி வாழ்ந்ததனால் செல்வர்களும் அப்படியே வாழ்ந்தார்கள். ஒரு செல்வன் ஒரு மனைவியைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே முறை. அப்படியின்றிப் 2量了