பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பல மனைவிகளையும், பல காமக் கிழத்திகளையும் ஒவ்வொரு செல்வனும் பெற்றிருந்தான். அத்தகையவர்களையே பெரிய செல்வர்களாக மதிக்கும் அவல நிலை அப்போது இருந்தது. இவற்றை எல்லாம் கண்ட அருணகிரியாருக்கு, உலகில் இந்தக் காம நோயாகிய தீ இப்படிப் பற்றியிருக்கிறதே, இந்த நோயைப் போக்க வேண்டுமே என்ற கவலை உண்டாயிற்று, அதனால் அடுத்தடுத்துப் பல வகைகளில் அந்த நோயைப் பற்றிப் பாடலானார். பிறரைப் பற்றிச் சொல்லப்போனால் அவர்களுக்குத் கோபம் வரும் என்று எண்ணிக் குற்றத்தைத் தம் மேலேயே ஏறிட்டுக் கொண்டு பாடினார். இது அவருடைய கருணைக்கு அடையாளம் என்பதைப் பலமுறை நாம் பார்த்திருக்கிறோம். வேட்டல் இப்போது ஒரு புதிய முறையில் காமுகனுடைய நிலையைப் பாடுகிறார். தம்முடைய நெஞ்சைப் பார்த்து அறிவுறுத்தும் முறை யில் இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது. 'நெஞ்சே, இன்னதை விரும்ப வேண்டும்; இன்னதை விரும்பக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் துன்பத்திற்குக் காரணமான பொருள்களை விரும்புகிறாயே! என்ற முறையில் பாட்டு வருகிறது. தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு வள்ளைதள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லைநல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்ட நெஞ்சே. வேட்டல் என்றால் விரும்புதல் என்று பொருள். நாம் மனைவியை விரும்பிக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். கலியாணத்திற்கு வேள்வி என்று ஒரு பெயர் உண்டு. வேட்டல் என்பதற்கே திருமணம் செய்தல் என்று பொருள். மனைவியைத் திருமணம் செய்துகொண்ட இடத்தை வேட்டகம் என்று சொல்கிற மரபு ஒன்று தமிழ்நாட்டில் உண்டு. அப்படியே விரும்பிச் செய் 218