பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை பொருள் இல்லாமல் போனால் மங்கிவிடும். அன்பு முன்னா லும், மோகம் பின்னாலும் வந்தால் அந்த மோகம் போனாலும் அன்பு நிலை நிற்கும். இளமை மணம் இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நாட்டில் சின்னஞ்சிறு பிராயத்தில் திருமணம் செய்து வந்தார்கள். இப்போது அத்தகைய மணம் நடக்க வேண்டுமா வேண்டாமா என்பதைப்பற்றி இங்கே ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஆனால் அந்தக் காலத்தில் இளம் பருவத்தில் மணம் செய்தது முறையாகுமா என்பதை மட்டும் இங்கே ஆராய விரும்புகிறேன். புறக் கண்ணைக்கொண்டு புற அழகில் ஈடுபட்டு மோகத்தை அடைகிற பருவம் காளைப்பருவம். அப்படியே மங்கைப் பருவம் உடையவர்கள் புற அழகைக் கண்டு மாத்திரம் மனத்தைச் செல்லவிடுகிறார்கள். பழங்காலத்தில் சின்னஞ்சிறு பிராயத்தில் மணம் செய்ததனால் அன்பை முதலில் உண்டாக்கினார்கள். இன்னாருக்கு இன்னார் மனைவி என்ற எண்ணம் மனத்தில் உண்டாகும்போது அவர்களுக்குள்ளே ஒருவகை உறவு இயல் பாகவே அமைந்துவிடுகிறது. பருவம் வராமையினால் பருவ உணர்ச்சியால் தோன்றும் குறைபாடுகள் உண்டாவதில்லை. கணவன் கறுப்பாய் இருந்தாலும் நம் கணவன் என்ற பக்தி உள்ளே வளர்ந்து வந்தது. அப்படியே மனைவி கறுப்பாக இருந் தாலும் இவள் நம் மனைவி என்ற உறவும் பற்றும் வளர்ந்து வந்தன. இந்தப் பிறவியிலே முதலில் தனித்தனியாக இருந்தா லும் மணமாகி ஒன்றுபட்ட பிறகு பிறப்பிலேயே இணைந்த வர்கள் போல ஆகிவிடுவார்கள். பேதைப் பரவத்தில், நெஞ்சில் இது நமக்குரிய பொருள் என்ற எண்ணம் பதிந்துவிட்டால் அதை எளிதில் மாற்ற முடியாது. அதற்கு மாறாகப் புறத் தோற்றத்திலும் புற அழகிலும் மனிதன் ஈடுபடுமிடத்து, அந்த இரண்டும் குறையும் போது அந்த ஈடுபாடும் குறையும். அன்றியும் அந்த இரண்டும் பின்னும் மிகுதியாக உள்ள ஒரு பொருளைக் கண்டால் அங்கே மனம் தாவும். பருவம் வருவதற்கு முன் ஒருவரை ஏற்றுக்கொண்டு உள்ளத்தில் உறவை வளர்த்து வருவதனால் இத்தகைய அவல 221