பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை பொருளையும், புறத்தோடு அகத்தையும் பார்த்து எடை போடு பவர்கள் அறிவு உடையவர்கள். அழகு என்று புறத்தை மாத்திரம் பார்த்தால் ஏமாந்து போக வேண்டியதுதான். புறமும் அகமும் ஒரு குழந்தை கூடத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கே ஒரு பாம்பு படம் எடுத்து ஆடுகிறது. பள பளவென்ற படத்தைக் கண்ட குழந்தை அதன் அருகில் சென்று பிடிக்க முயல்கிறது. அப்போது திடீரென்று அந்தக் குழந்தையின் தாய் அங்கே வருகிறாள். பாம்பையும், குழந்தையையும் பார்த்த வுடன் ஐயோ என்று அலறிக்கொண்டு குழந்தையை அப்பால் எடுத்தோடுகிறாள். அவளும் அந்தப் பாம்பைப் பார்த்தாள். பாம் பின் படம் பளபளவென்றிருப்பதையும் பார்த்தாள். ஆனால் அதோடு அவள் நிற்கவில்லை. புறத்தில் தோன்றிய படத்தின் பளபளப்போடு அதன் அகத்திலுள்ள நஞ்சையும் அவள் நோக்கி னாள். அவள் புறக்கண் அதைச் சொல்லியது. புறக் கண்ணையும், அகக் கண்ணையும் நன்றாக இணைத்துப் பார்க்கும்போது பாம்பி னுடைய பளபளப்பும், அதனு:டே கரந்து நிற்கும் நஞ்சும் அவளுக்குத் தெரிந்தன. நஞ்சினால் தன் குழந்தை இறந்துபடும் என்ற நினைவு வரவே, அதிலிருந்து பாதுகாப்பதற்காக அவள் தன் குழந்தையை எடுக்க ஓடினாள். அவள் கண்ட காட்சிதான் உண்மையான காட்சி. குழ்ந்தை கண்ட காட்சியின் போக்கிலே விட்டிருந்தால் அந்தக் குழந்தை பாம்புக்குப் பலியாகியிருக்கும். புறமும் அகமும் ஒத்துப் பார்க்கின்ற பார்வையினால் உண்மை யான பயன் உண்டாகிறது. புறங்காணுதலும் அகங்காணுதலும் இராமாயணத்தில் இராமனுடைய அருள் பெற்ற விராதன் அப்பெருமானுடைய பேருருவத்தைத் தரிசனம் செய்கிறான். இராமபிரான் அவனுக்குத் தன் விசுவரூபத்தைக் காட்டுகிறான். அந்தப் பெருமானுடைய திருவுருவத்தில் ஈடுபட்ட விராதன் அவனுடைய திருவடி முதல் திருமுடி வரைக்கும் பார்க்கிறான். ஆராத பெருங் காதல் மீதூர அந்த அழகில் சொக்கிப் போகிறான். உணர்ச்சி விஞ்ச இராமபிரானுடைய திருக்கோலத்தை எண்ணிப் 223