பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഋങ്ങി(ിഖണി அப்படிச் சிந்திக்கச் சிந்திக்க நல்ல தெளிவைப் பெறுவோம். சிந்திப்பதன் பயன் தெளிவு. தெளிந்த பிறகு அந்தத் துறையில் நாம் முயற்சி செய்ய வேண்டும். கற்றலுக்கு அடுத்தபடி வருவது கேட்டல். கேட்டலுக்கு அடுத்தபடி வருவது சிந்தித்தல். சிந்தித் தலின் பயனாக வருவது தெளிதல். வெறும் அறிவு அநுபவத்தை உண்டாக்காது. தெளிதல் என்பது அறிவின் கொழுந்து. கற்கும் போது அறிவு உலகத்தில் காலை எடுத்து வைக்கிறோம். கேள்வி யினால் சிறிது தூரம் பயணம் செய்கிறோம். சிந்தனையினால் பின்னும் உறுதி பெறுகிறோம். தெளிதல் வந்துவிட்டால் அறிவின் எல்லையை அணுகுகிறோம். அது போதுமா? "இப்படி வியாபாரம் செய்தால் இன்ன லாபம் கிடைக்கும்' என்று ஒருவன் தெளிந்து கொள்கிறான். அந்தத் தெளிவே அவனுக்கு லாபமாகாது. செய் கிற செயலைப் பற்றிய துணுக்கங்களை எல்லாம் தெரிந்துகொண்டு அப்பால் செயலிலே புக வேண்டும். நம்பிக்கை கொண்ட அளவில் பயன் வந்துவிடாது. அதற்கு அடுத்தபடி முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் பயன் உண்டாகும். முயற்சியின் அவசியம் பலவற்றைக் கற்றும், பின்பு கேட்டும், அதற்கப்பால் சிந்தித்தும், அதன் பயனாக நல்ல தெளிவை அடைந்திருப்பவ னுக்கு முயற்சி செய்யும் ஆர்வம் உண்டாகும். தெளிவு உறுதியாக இருந்தால் அந்த ஆர்வம் நிச்சயமாக எழும். அந்த ஆர்வத்தின் பயனாக முயற்சி உண்டாகும்; அதன் பயனாக அநுபவம் தலைப்படும். முயற்சியினிடையே உண்டாகும் தடைகளைக் குருநாதன் கிருபையால் போக்கிக் கொள்ளலாம். மெத்தப் படித்தவனுக்குப் படித்த அளவில் அறிவு உண் டாகிறது. ஆனால் அவனுடைய உள்ளத்தில் சில ஐயங்கள் இருக்கத்தான் இருக்கும். தத்துவ நூல்களைப் படித்துவிட்டு அதனால் ஓரளவு அறிவு பெற்று அந்த அறிவுதான் அநுபவம் என்று ஏமாந்து போகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். யாரேனும் பெரியவர் உயர்ந்த அநுபவத்தைப் பற்றிப் பேசுகிறபோது அவர் சொல்வது ஓரளவுக்கு நமக்கு அறிவு அளவில் விளங்குமானால் நாமும் அவரை ஒத்த நிலையில் இருப்பதாக எண்ணிக்கொண்டு விடுகிறோம். இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. அறிவு 255