பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கதையின் கருத்து இந்தக் கதையினால் இரண்டு மூன்று கருத்துக்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுள் சிவபெருமானாகவும், திருமாலாகவும் காட்சியளிக்கிறார். யார் யார் எந்தக் கோலத்தில் நினைக்கிறார்களோ அதற்கு ஏற்றபடி காட்சி கிடைக்கிறது. விஷ்ணுபுராணத்தைப் பார்த்தால் சிவனை ஏவலாளனாகவும், திருமாலைத் தலைவனாகவும் சொல்லி இருக்கும். சிவ புராணத்தைப் பார்த்தால் சிவன் பெரியவன் என்றும், திருமால் அடியான் என்றும் சொல்லியிருக்கும். இரண்டையும் பார்த்துச் சமாதானம் செய்துகொள்ள ஏதாவது வழியுண்டா? உண்டு. ஒரு நாடகக் குழுவில் அண்ணன் தம்பி இரண்டு பேரும் மிகச் சிறப்பாக நடிக்கிறார்கள். அவர்களே அந்த நாடகக் குழுவின் தலைவர்கள். சிலநாள் அண்ணன் இராமனாக வேஷம் போட்டுக் கொள்வான்; தம்பி இராவணனாக வேஷம் போட்டுக் கொள்வான். சில நாள் தம்பி இராமனாகவும், அண்ணன் இராவணனாகவும் வேஷம் போட்டுக் கொள்வார்கள். எந்த வேஷம் போட்டாலும் வேஷத்திற்குத் தக்கபடி நடிப்பதில் அந்த இரண்டு பேரும் வல்லவர்கள். அதனால் அவர்களுக்குப் பெரும் புகழ் உண்டாயிற்று. முக்கியமாக இராவணன் வேஷம் போடும் போது அந்தச் சகோதரர்களுக்குப் பெருமை மிகுதியாயிற்று. ஏன் தெரியுமா? பார்த்தவர்கள் இராவணனைப் பாராட்டவில்லை; இராவணன் வேஷம் போட்டவரைப் பாராட்டினார்கள். இராவணன் வேஷம் போட்டு, பொல்லாதவனாக இருக்கக் கூடாது என்ற நீதியை மக்களுடைய உள்ளத்தில் வற்புறுத்தின்மையினால் அந்த வேஷத்திற்குச் சிறப்பு உண்டாயிற்று. இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்வது ஒரு முறை; இப்படிச் செய்யக்கூடாது என்று சொல்லிக்காட்டுவது ஒரு முறை. வேதம் இன்னது செய்; இன்னது செய்யாமல் ஒழி என்று சொல்கிறது. வாக்கினால், 'இது செய், இது செய்யக்கூடாது" என்று சொல்வது ஒரு முறை; அதனை நாடகமாக்கி, 'இது செய்யக்கூடாது; இது செய்ய வேண் டும்' என்று தெரிந்துகொள்ளச் செய்வது பிறிதொரு முறை. திருமாலும், சிவபெருமானும் பலபல வடிவங்களில் இருந்து நாடகம் நடித்துக் காட்டினார்கள். சில சமயங்களில் சிவன் 2633