பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 என்பது அச்சூத்திரம். சேவல் என்ற சொல் வன்மையைக் காட்டு வது. மயிலோ மென்மையையுடையது. ஆண் மயிலாக இருந் தாலும் அதன் மென்மை மாறுவது இல்லை. அந்த மென்மையைக் கருதியே வன்மையைக் குறிப்பதாகிய சேவல் என்னும் சொல்லை அதற்குச் சொல்லக் கூடாது என்று வகுத்தார் தொல்காப்பியர், ஆனால் இந்தச் சூத்திரத்திற்கு உரை எழுத வந்த பேராசிரியர் ஒரு சிறிய விலக்கைச் சொன்னார். 'செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும் என்று எழுதினார். மிக்க வீரமுடைய முருகப்பெருமான் ஊர்ந்து வரும் மயிலானால் சேவல் என்ற பெயரை அதற்கும் சொல்லலாம் என்பது பொருள். இதை மனத் தில் வைத்துக்கொண்டு சில உரையாசிரியர்கள் சேவற்கொடி என்று வரும்போது மயில்கொடி என்று பொருள் எழுதுவார்கள். வீர நடையும் ஈர நடையும் முருகன் மயிலின்மேலே வீரச் செயல் செய்யும் போதும் ஊர்ந்து வருவான், ஈரச் செயல் புரியும்போதும் ஊர்ந்து வருவான். மயிலுக்கு இரண்டு வகையான நடை உண்டு. அசுரர்களை அச்சுறுத்துகின்ற மிடுக்கு நடை உண்டு; தொண்டர்களுக்கு நலம் தரும் அழகு நடையும் உண்டு. போர்க்களத்தில் பகைவர்களைப் பொருது வெற்றி அடையச் செல்லும்போதும் ஆண்டவன் மயிலை ஊர்ந்து செல்வான்; தொண்டர்களுக்கு அருள் செய்யச் செல்லும் போதும் நீலச் சிகண்டியில் ஏறிச் செல்வான். ஆகவே வீர நடையும், ஈர நடையும் பொருந்தியது மயில் என்று தெரிந்துகொள்ள வேண்டும். இங்கே அதனுடைய வீரத்தை எண்ணி, தடக்கொற்ற வேள் மயிலே' என்றார். தொண்டர்கள் மயிலை அநுகூலமான தன்மையுடையது என்று பாராட்டுவார்கள். 'திந்திதிமி தோதி தீதித் திதி தந்ததன தான தானத் தான செஞ்சணகு சேகு தாளத்தோடு - நடமாடும் செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்கஅது கூல பார்வைத் தீர செம்பொன்மயில்' என்று திருப்புகழில் வருகின்றது. 272