பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் கடந்த மயில் தோகையை விரித்து வருகின்ற மயில் ஓங்கார உருவத்தை நினைப்பூட்டுகின்றது. அதைக்கொண்டு, 'ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்ட தாடும்மயில் என்ப தறியேனே' என்று அருணகிரியார் பாராட்டுவார். இப்போது பார்க்கப் போகும் பாடலில் அருணகிரியார் மயிலின் பெருமையை வேறு ஒரு விதத்தில் சொல்ல வருகிறார். “தடக்கொற்ற வேள்மயிலே, எல்லோருடைய இடர்களை யும் தீர்க்கும் இயல்பையுடைய உன்னை ஆண்டவன் மேலே ஊர்ந்து செல்லாமல் உன் விருப்பப்படியே விட்டுவிட்டால் நீ என்ன செய்வாய் தெர் புமா?' என்று கேட்டு விடைசொல்வது போலச் சொல்கிறார். மேருவுக்கும் அப்பால் தடக்கொற்ற வேள்மயிலே, இடர் தீரத் தனிவிடின் நீ. அதற்கு மேல் என்ன நடக்கும் என்பதைத் தம்முடைய கற்பனையால் சித்திரித்துப் பார்க்கிறார். மயிலுக்கு ஆனந்தம் உண்டானால் அது முதலில் தனது தோகையை விரித்து நடமாடத் தொடங்கும். முருகப்பெருமான் ஏறும் மயிலோ மிக விரிந்தது. மிகப் பெரியது. அது தன்னுடைய தோகையை வட்டமாக விரித்து நின்றால் அந்தத் தோகையின் அகலம் வடக்கே உள்ள மேருமலையையும் தாண்டிச் செல்லுமாம். வடக்கில் கிரிக்கு அப்புறத்தும் நின் தோகையின் வட்டமிட்டு. பூமிக்கு நடுவில் இருப்பது மேரு கிரி, அது நம்முடைய நாட்டுக்கு வடக்கே இருக்கிறதாம். இப்படிப் புராணம் சொல் கிறது. பூமிக்கு ஒர் அச்சு வேண்டும் அல்லவா? அந்த அச்சுத்தான் மேரு. அதன் உச்சியில் தேவர்கள் வாசம் செய்வதால் அதனைச் சுராலயம் என்று சொல்வார்கள். மேரு மலையைச் சுற்றிச் சந்திரனும் சூரியனும் சுற்றுகிறார்கள் என்பது புராண வரலாறு. இவைகள் எல்லாம் பழங்காலத்தில் ஏதோ ஒரு கருத்தை உள்ளடக்கிச் சொன்ன செய்திகள். உலகத்துக்கு மையமாகவும், 273