பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் கடந்த மயில் கடந்தவன். நாமோ அந்த எல்லைக்கு அகப்பட்டவர்கள் இடம் காலம் ஆகிய இரண்டின் எல்லைகளும் நமக்கு இப்போது புலப் படுவதில்லை. காலமும், இடமும்கூட எல்லை கடந்தவையே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுள் ஒருவன் தான் காலதேச பரிச்சின்னத்திற்கு அகப்படாதவன்; எந்தவிதமான எல்லையும் இல்லாதவன். காலத்திற்கும் எல்லை உண்டு; இடத்திற்கும் எல்லை. உண்டு. அந்த எல்லை நமக்கு எப்படித் தெரியும்? ஒரு வீட்டுக்கு உள்ளேயிருந்து பார்த்தால் அதன் புற எல்லை நமக்குத் தெரியாது. அந்த வீட்டை விட்டு வெளியே வந்தால் அதன் எல்லை நமக்குத் தெளிவாகத் தெரியும். கால எல்லைக்கும், இட எல்லைக்கும் அகப்பட்ட பிரபஞ்ச வாழ்விலே நாம் இருக்கும் மட்டும் அவற் றின் முடிந்த எல்லைகள் நமக்குப் புலப்படா. அந்த எல்லை ைபக் கடந்து சென்றால் காலத்தின் எல்லையையும், இடத்தின் எல்லை யையும் நாம் தெரிந்துகொள்ளலாம். -

    • . எல்லை கடந்த இன்பம்

நாமாக முயன்று இந்த எல்லையைக் கடப்பது என்பது முடியாத காரியம். இந்த எல்லையைக் கடந்து நிற்கும் ஆண்ட வனைச் சார்ந்தால் நாமும் அவனோடு சேர்ந்து எல்லையைக் கடந்த இன்பத்தில் நிலை நிற்போம். ஒரு சிறிய பருக்கைக் கல்லை ஒரு குளத்தில் போட்டால் அது குளத்தில் ஆழ்ந்து விடுகிறது. இரண்டு டன் எடை உள்ள ஒரு பாறையை அந்தக் குளத்தின் மேல் மிதக்கவைக்க முடியுமா? முடியாது. ஆனால் அந்தக் காரியத்தையும் யாவரும் அதிசயிக்கும்படி செய்து காட்டலாம். எப்படி? தண்ணிர்மேல் மிதக்கின்ற ஒரு பெரிய கட்டையில் அந்தப் பாறையை வைத்தால் அது தண்ணீரின் மேல் மிதக்கும். சிறிய கல்கூடத் தண்ணீரில் அமிழும் போது அவ்வளவு பெரிய பாறை தண்ணிரில் மிதக்கிறதே என்று அறியாதவர்கள் ஆச்சரியப்படலாம். அந்தக் கல் தானாகவே மேலே மிதக்கவில்லை. தண்ணீரின் மேல் மிதக்கும் இயல்புடைய கட்டையைச் சார்ந்த தனால் அது மிதக்கிறது. அதுபோல் கால எல்லைக்கு, இட எல்லைக்கு அகபபட்ட நாம் இந்த இரண்டு எல்லைகளையும் தாண்ட முடியாது. அந்த எல்லைகளைக் கடந்து நிற்கும் ஆண்ட க.சொ.V1-18 27ア