பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வனை அடைந்தோமாயின் அவனுடைய சார்பினால் காலத்தை யும், இடத்தையும் வென்று அந்த எல்லைகளைக் கடந்த பெரு வெளியில் இன்பம் நுகர்ந்திருப்போம். கருத்து இந்தக் கருத்தையே இங்கே மயிலின்மேல் வைத்து அருண கிரியார் சொல்கிறார். இறைவனுடைய சம்பந்தத்தால் மயில் இட எல்லையையும், கால எல்லையையும் தாண்டிற்று. மயில்மேல் ஏறும் பிரானை அறிந்தவர்கள் காலத்தை வென்றிருப்பார் என்று ஒரு பாட்டு முன்னே கந்தர் அலங்காரத்தில் வந்திருக்கிறது. 'நீலச் சிகண்டியில் ஏறும் பிரான்எந்த நேரத்திலும் கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே காலத்தை வென்றிருப் பார்மரிப் பார்வெறும் கர்மிகளே” என்ற பாட்டு அது. இறைவனுடைய செயலை அறியும் யோகி களே காலத்தை வென்றிருப்பார்கள். பின்பு அவர்கள் கால எல்லையைக் கடந்து இன்பம் பெறுவார்கள். இதனைச் சொல்லும் போது முருகப்பெருமானை, 'நீலச் சிகண்டியில் ஏறும் பிரான்' என்றார். காலங் கடந்தவன் எம்பெருமான். அவனைச் சார்ந்த நீலச் சிகண்டியும் காலம் கடந்தது. இங்கே அந்த மயில் இடமும் கடந்தது என்று சொல்ல வருகிறார். நாம் காணும் இடமாகிய நாட்டைக் கடந்து, பூமியைக் கடந்து, மேருவைக் கடந்து, பின்பு கடலைக் கடந்து, நாம் காணும் பொருளாகிய கதிரவனைக் கடந்து, நாம் காணாப் பொருளாகிய கண்க சக்ரத்திடரையும் கடந்து, கடைசி எல்லையாகிய திசையையும் கடந்து நிற்கும் மயில் என்று சொல்கிறார். மயிலின்மேல் வைத்துச் சொன்னாலும், ஆண்டவன் திரு வருளைப் பெற்ற ஆன்மாக்கள் இட எல்லையைக் கடந்து இன்பத்தைப் பெறும் என்று சொன்னதாகவே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். சின்ன இடத்தைக் கடந்தபிறகு பெரிய இடத்தைக் கடப்பது இயற்கைதான். அளவு படாத ஆண்டவனை அண்டின ஆன்மாவும் அளவுபடாத நிலையில் அளவுபடாத z f tు