பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் கடந்த மயில் இன்பத்தை அடையும். மயிலைப்போல அவனுடைய அணி மையைப் பெற்றால் காலம் கடந்து, இடமும் கடந்து நிற்கும் பேரின்ப நிலையை அடையலாம். 大 தடக்கொற்ற வேள்மயி லேஇடர் தீரத் தனிவிடின் நீ வடக்கில் கிரிக்குஅப் புறத்தும்நின் தோகையின் வட்டமிட்டுக் கடற்குஅப் புறத்தும், கதிர்க்குஅப் புறத்தும், கனகசக்ரத் திடர்க்குஅப் புறத்தும், திசைக்குஅப் புறத்தும் திரிகுவையே. (விரிந்த வெற்றியையுடைய முருகப் பெருமானுக்குரிய வாகன மாகிய மயிலே, இடர் தீரும்படியாக உன்னைத் தனியே விட்டு விட்டால், நீ வடக்கில் உள்ள மேருமலைக்கு அப்புறத்தும் உன்னுடைய தோகையை விரித்து வட்டமிட்டுக் கடல்களுக்கு அப்புறத்தும், சூரியனுக்கு அப் பாலும், பொன்னிறமாகிய உலகப்புறச் சக்கரவாளகிரிக்கு அப்பாலும், திசைகளுக்கு அப்பாலும் சென்று திரிவாய். த ட - விசாலமான கொற்றம் - வெற்றி, அரசுரிமையும் ஆம். வடக்கில் கிரி - மேருமலை. தோகை - மயிலின் வால். கதிர் - சூரியன். திடர் - மேடு; இங்கே மலை. சக்ரத்திடர் - சக்கரவாள கிரி.) - மயில் இடங்கடந்து உலவும் தன்மையை உடையது என்பது கருத்து. இது கந்தர் அலங்காரத்தில் 96-ஆவது பாட்டு. 279