பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேடன் பட்ட பாடு மயிலினது பெருமையைச் சொன்ன அருணகிரிநாதர் மறு படியும் ஒரு கற்பனைக் காட்சியைக் காட்டி, அதன் பெருமை யைப் பின்னும் விரிக்கிறார். அருணகிரிநாதருக்குத் திருச்செங் கோட்டில் ஒரு தனி அன்பு உண்டு. வேறு எந்தத் தலத்தையும் வைத்துப் பாடாத கந்தர் அநுபூதியில், "நாகாசல வேலவ' என்று பாடினார். இதற்குரிய காரணத்தை முன்பு ஒரு சொற் பொழிவில் சொல்லியிருக்கிறேன். திருச்செங்கோட்டுக்கு, சர்ப்பகிரி, நாககிரி என்ற பெயர்கள் உண்டு. நெடுந்துரத்தி லிருந்து பார்த் தால் ஒரு பாம்பு படுத்திருப்பது போலத் தோன்றும். அதற்கு அந்தப் பெயர் வந்ததற்கு அந்தத் தலத்தின் புராணம் ஒரு காரணம் சொல்கிறது. புராண வரலாறு ஒரு சமயம் வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை உண்டாயிற்றாம். பாம்புக்குக் காற்றுத்தான் உணவு. அகங்காரம் வந்தால் உணவு கொடுப்பவரையும் பகைத்துக் கொள்ளும் நிலை உண்டாகும். இன்றைக்கு அப்படிப் பல கலகங்கள் நடப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். எல்லாக் காலத்திலும் இத்தகைய கலகங்கள் நிகழ்வது வழக்கந்தான் போலும் பாம்பு காற்றை உண்ணும் என்று சொல்வார்கள். 'காலே மிக உண்டு காலே இலாத கணபனம்' என்று முன்பு அலங்காரத்தில் வந்திருக் கிறது. இப்போது பாம்பாகிய ஆதிசேடனுக்கும் வாயு பகவானுக் கும் சண்டை மூண்டது. யார் வன்மை உடையவர்கள் என்று சோதிப்பதற்கு ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டார்கள். காற்று வெகுவேகமாக வீசியது. ஆதிசேடன் தன்னுடைய படங் களை விரித்துக்கொண்டு சீறினான். என்ன இருந்தாலும் பாம்பின்