பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேடன் பட்ட பாடு உணவாகவும் மூச்சாகவும் விளங்கும் வாயு தோல்வி அடை வானா? ஆதிசேடனின் படங்களை மோதிப் பல பகுதிகளாகப் பிய்த்து எறிந்தான். அவை வெவ்வேறு இடங்களில் விழுந்தன. திருக்கோணமலை, திருவேங்கடம், திருச்செங்கோடு முதலிய பல தலங்கள் அப்படி அமைந்தவை என்று புராணங்கள் சொல் கின்றன. அவ்வாறு ஆதிசேடனுடைய தலை விழுந்த இடங் களில் ஒன்று திருச்செங்கோடு. இதை நினைப்பூட்டுவதுபோல அங்கே அடிவாரத்தில் ஆதிசேடன் சிலை செதுக்கப்பட்டிருக் கிறது. அதற்கு அன்பர்கள் பூசை செய்வதுண்டு. அந்த நாககிரியாகிய திருச்செங்கோட்டுக்கு அருணகிரியார் சென்று தங்கினார். பல காலம் அங்கே தங்கி யோகம் பயின்றார். ஒரு நாள் அந்த மலையைப் பார்த்தபோது ஆதிசேடன் உருவம் நினைவுக்கு வந்தது.அந்த எண்ணத்தில் இந்தப் பாட்டைப் பாடத் தொடங்கினார் போலும்! குணசீலர் வரலாறு நெடுந்தூரத்தில் இருந்து இந்த மலையைப் பார்த்தால் நாகத்தைப் போலத் தோற்றுகிறதை வைத்துக்கொண்டு எழுந்த பழைய வரலாறு ஒன்று உண்டு. திருச்செங்கோட்டில் குணசீலர் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். அவர் முருகனிடத்தில் மிக்க பக்தி பூண்டு வாழ்ந்தார். சிறந்த புலவராகிய அவர் தம்முடைய கவிதையை வடிவேல் பெருமானுக்கன்றி வேறு ஒருவருக்கு அர்ப்பணம் செய்யக்கூடாது என்று விரதம் கொண்டிருந்தார். மிகவும் அடக்கமானவர். அந்தக் காலத்தில் தென்பாண்டி நாட்டில் ஆழ்வார் திருநகரி யில் பிரதிவாதி பயங்கரன் என்ற புலவன் இருந்தான். அவன் மிடுக்காகக் கவி பாட வல்லவன். அதைவிடக் கல்விச் செருக்கு நிரம்பியவன். தன்னுடைய புலமை மிடுக்கினால் தன்னினும் புலமை குறைந்த புலவர்களிடம் சென்று வாதிட்டு, 'நான் உனக்கு அடிமை” என்று அவர்களிடமிருந்து முறி எழுதி வாங்குவது அவன் வழக்கம். இப்படியே அவன் பல இடங்களுக்குச் சென்று குறையாகப் படித்த புலவர்களை அடிமையாக்கிக் காண்டு வந்தான். எந்த ஊருக்குப் போகும் முன்பும் அந்த ஊரிலுள்ள புலவர் 28i