பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேடன் பட்ட பாடு இடைமறித்தான். "அதுதான் சொல்ல வருகிறேன். நான் அந்தப் பெருமானிடம் பாடம் கேட்கச் சென்றேன். விரைவில் கவி பாடுவதற்குரிய பழக்கத்தை அவர் சொல்லித் தந்தார். என்னைப் போலப் பல மாணாக்கர்கள் அவரிடம் படித்துப் பெரும் புலவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எனக்கு விரைவில் கவி பாட வரவில்லை. 'நீ என்னிடம் படித்தது போதும், என் மாணாக்கனாக இருப்பதற்கு உனக்குத் தகுதி இல்லை என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டார். பிழைக்க வேறு வழி இல்லாமையினால் இப்போது ஆடு மாடு மேய்த்துக் கொண் டிருக்கிறேன்' என்று அவன் சொன்னான். அதைக் கேட்ட பிரதிவாதி பயங்கரத்தின் தலை சுழன்றது. துரத்திவிடப்பட்ட மாணாக்கனே தன்னைத் தோல்வியுறச் செய்து விட்டான் என்றால் அந்தப் பெரும் புலவருடைய புலமை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தான். நாம் அந்தப் பக்கமே போகக் கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்தான். 'இந்த அவமானமே நமக்குப் போதும். அங்கும் போய் அவமானப்பட வேண்டாம் என்று நினைத்தவனாக அந்த மாட்டுக்காரச் சிறுவனிடம், 'அப்பா, என்னுடைய வணக்கத்தை அந்தக் குண சீலரிடம் போய்த் தெரிவி' என்று சொல்லிச் சிவிகையைத் திருப்பிக் கொண்டு வந்த வழியே போய்விட்டான். முருகன் இப்படி ஓர் அற்புதத்தைச் செய்தான் என்ற கதை ஒன்று வழங்கு கிறது. அதனைக் கொங்குமண்டல சதகம் ஒரு பாட்டில் எடுத்துச் சொல்கிறது. 'பெருமை மிகும்.அர வச்சிலம் பாமெனின் பெட்புறும்அவ் வரவு படம்விரித் தாடாதது என்னென் றகத்துனுமோர் கருவி வெருக்கொள ஆமேய்ப் பவனாக் கனிந்துதிரு மருகன் மயில்கொத்தும் என்றெனச் சொல்கொங்கு மண்டலமே.” இந்தக் கதை எனக்கு இங்கே நினைவுக்கு வந்ததற்குக் காரணம்: திருச்செங்கோடு ஆதிசேடனைப் போலத் தோற்றுவதும், அது மயிலைக் கண்டு அஞ்சுவதுமாகிய செய்திகள் இப்போது இங்கே பார்க்கப் போகிற கந்தர் அலங்காரப் பாடலிலும் வருவது தான். சாதாரண மயிலைக் கண்டாலே பாம்புக்குப் பயம். பாம்புக்கும் மயிலுக்கும் எப்போதுமே விரோதம். தான் படம் 285