பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேடன் பட்ட பாடு போது இவன் அங்கே வருவதில்லை, "எம்பெருமான் வலிய இங்கே வந்திருக்கிறானே அது அவன் பெருங்கருணையல்லவா?" என்று எண்ணிப் பணிவாக இல்லாமல் என்னை எளிதாக எண்ணி நக்ைகிறான் என்று மயிலுக்குக் கொஞ்சம் கோபம் உண்டாயிற்று. மயில் தனியாகப் போயிருந்தால் அதற்குக் கோபம் வராது. இப்போது முருகப்பெருமானுக்கு வாகனமாக இருக்கிறது. ஒரு தலைவனுக்குப் பெருமை இருந்தால் அவனைச் சார்ந்த அங்கங் களுக்கும் பெருமை உண்டாகும். மற்றவர்கள் தலைவனிடத்தில் காட்டுகின்ற மரியாதையில் ஒரு பகுதியை, அவனைச் சார்ந்தவர் களிடத்திலும் காட்டினால்தான் தலைவனால் நன்மை கிடைக்கும். வாகனத்தின் பெருமை இறைவனுடைய தொடர்பினால் அவன் வாகனங்களுக்கும் பெருமை உண்டென்பதைப் பல செய்திகளால் உணர்ந்து கொள்ள லாம். அருணகிரிநாதர், ஆடும் மயிலாகின்ற ஆண்டவனது வாகனத்தைப் பலபடியாகப் பாடியிருக்கிறார் என்பதைப் போன சொற்பொழிவில் சொன்னேன். - ஒரு கோயிலைப் பார்த்தவுடனேயே அது இன்ன கோயில் என்று தெரிய வேண்டுமானால் அந்தக் கோயிலின் திருமதிலைப் பார்த்தால் தெரியும். அந்த மதிலின் மேல் உள்ளேயிருக்கும் மூர்த்தியின் வாகனத்தை அமைத்திருப்பார்கள். கோயிலுக்குள் புகுந்தால் கொடி மரத்தின் அருகில் அந்த வாகனத்தைப் பார்க்க லாம். அதை வணங்கிவிட்டே உள்ளே போவது ஒரு சம்பிரதா யம். திருமதிலின் மேலுள்ள அடையாளத்தைக் கண்டு அது இன்ன கோயில் என்று தெரிந்து கொள்ளலாம். இதைச் சொல்லும் போது எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஆசாரிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தது ஒருநாள் இரவு ஒரு சிறிய கிராமத்தில் காமகோடி பீடாதி பதிகளாகிய பூரீமத் சங்கராசாரிய சுவாமிகளைத் தரிசித்தேன். சிறிது நேரம் அவர்களிடம் பேசி இன்புறும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது அவர்கள், 'திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?' என்று கேட்டார்கள். 'இரண்டுக்கும் ஆதாரம் உண்டு' என்று சொன்னேன். 287