பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேடன் பட்ட பாடு ஏவலாளிகள் அதை மறைத்து மரியாதை செய்ய வேண்டும். அதற்கு மாறாக ஆதிசேடன் நடந்து கொண்டான். அவன் தன்னை அவமானம் செய்து விட்டான் என்பதை மயில் உணர்ந்தது. தன் தோகையைச் சர்ர் என்று ஒரு முறை அடித்துக் கொண்டது. அப்படி அடித்ததனால் ஒரு பெரும் காற்றுப் புறப்பட்டது. அந்த வேகத்தில் ஆதிசேடனுடைய படங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. முன்னாலே காற்று மோதியதனால்தானே தலைகள் பிய்ந்து விழுந்தான் ஆதிசேடன்? இப்போது தலைகள் ஒன்றோடு ஒன்று மோதியதனால் படங்களில் இருந்த இரத்தினங்கள் பொல பொலவென்று உதிர்ந்தன. வாயில் அடித்தால் பற்கள் பொல பொலவென்று உதிர்வது போல, மயில் ஆரவாரித்துத் தோகையை அடித்துக் கொண்டதனால் ஆதிசேடனுடைய பணாமுடியிலுள்ள இரத்தினங்கள் உதிர்ந்துவிட்டன. பிறகு மயில் ஒரு கொத்துக் கொத்தியது. அந்தத் தாக்குதலைப் பொறுக்க முடியாத ஆதி சேடன், கிடந்த நிலையில் இல்லாமல் கொஞ்சம் புரளும்படியாக ஆகிவிட்டது. புரளவே, மேலே படுத்துக்கொண்டு உறங்கிய திருமால் கீழே விழுந்தார். தூங்கினாலும் அவர் திருக்கரத்தில் சங்கம் சக்கரம் இருந்தன. அவர் கீழே விழுந்தவுடன் சங்கு சக்கரங்கள் கையிலிருந்து நழுவி விழுந்துவிட்டன. இப்போது முருகப்பெருமானுடைய வாகனமாகிய மயிலின் அடியின் கீழே ஆதிசேடனுடைய தலைகளிலிருந்து உதிர்ந்த மாணிக்கங்களும், திருமாலின் கையிலிருந்த சக்கராயுதமும் சங்கமும் விழுந்து கிடக் கின்றன. இத்தகைய காட்சி ஒன்றை அருணகிரியார் தம் கற்பனை யினால் அமைத்துக் காட்டுகிறார். சேலில் திகழ்வயல் செங்கொடை வெற்பன் செழுங்கலபி ஆலித்து அனந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்துஅதிர்ந்து காலில் கிடப்பன மாணிக்க ராசியும் காசினியைப் பாலிக்கும் மாயனும் சக்ரா யுதமும் பணிலமுமே. செங்கோட்டு வளம் செங்கோடை என்பது திருச்செங்கோடு. அவர் காலத்தில் அங்கே வயல்கள் நிரம்பியிருந்தன. அந்த வயல்களில் நெல் இருக்கிறதென்று சொல்லலாம்; பசுமை இருக்கிறதென்று 29.4