பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேடன் பட்ட பாடு கொண்டு வருகிற அருணகிரியார் இந்தக் காட்சியைத் தாமே படைத்து மொழிந்தார். மயிலின் பெருமையை இந்த வகையில் சொல்ல வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. ★ சேலின் திகழ்வயல் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித்து அனந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்துஅதிர்ந்து காலில் கிடப்பன மாணிக்க ராசியும் காசினியைப் பாலிக்கும் மாயனும் சக்ரா யுதமும் பணிலமுமே. |சேல்மீன்களால் வளம் விளங்குகின்ற வயல்களையுடைய திருச் செங்கோட்டு மலைக்குரியவனாகிய முருகனது வாகனமாகிய செழிப்பான தோகையை உடைய மயில், ஆரவாரம் செய்து ஆதிசேடனது படங்களை யுடைய தலையைத் தாக்க அதனால் அத்தலைகள் அதிர்ந்து அதிர்ந்து நடுங்க, அது காரணமாக அந்த மயிலின் காலில் கிடக்கும் பொருள்கள், மாணிக்கக் கூட்டமும், உலகைப் பாதுகாக்கும் திருமாலும், அவனுடைய, சக்கரப் படையும் சங்கும் ஆகியவை. சேலின் - சேல் மீன்களால். செங்கோடை - திருச்செங்கோடு. வெற்பன் என்றது முருகனை. கலபி - தோகையையுடைய மயில். ஆலித்து - ஆரவாரம் செய்து. அனந்தன் - ஆதிசேடன். பணாமுடி - படங்களை யுடைய தலை; பணம் - படம். ஆயிரம் படங்களாதலின் அதிர்ந்து அதிர்ந்து என்றார். காலில் - மயிலின் காலில். ராசி - கூட்டம். பாலிக்கும் - காப்பாற்றும். மாயன் - திருமால், பணிலம் - சங்கு.) மயில் செருக்குடையவர்களை அடக்குவது என்பது கருத்து. இது கந்தர் அலங்காரத்தில் 97-ஆவது பாட்டு. 295