பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதியும் விதியும் அலங்காரத்தில் சொல்கிறார். அவரும் விதியையும், நதியையும் எடுத்துச் சொல்கிறார். ஆனால் சற்றே வேறுபாடுள்ளது அந்தப் பாட்டு. ஆற்றில் மிதப்பவன் ஒருவன் ஒரு பெரிய மூட்டையைத் தலையில் சுமந்தபடியே நடந்து கொண்டிருந்தான். இருட்டில் நடக்கிறவனாகையால் இன்ன இடத்தின் வழியாகப் போகிறோம் என்ற நிதானம் அவனுக்குத் தெரியவில்லை. நடக்கிற இடம் சற்று மெத்தென்றும், தடையில் லாமலும் இருந்ததனால் போய்க் கொண்டே இருந்தான். அவன் போன இடம் ஒரு காட்டாறு. அந்த ஆற்றில் வெள்ளம் இல்லை. மணல் பரவியிருந்தது. அது மணல் பாதை என்று எண்ணி விட்டான். அப்போது திடீரென்று வெள்ளம் வந்தது. காட்ட று ஆதலால் இன்ன சமயத்தில் வெள்ளம் வரும் என்று சொல்ல இயலாது. அது தோன்றிய இடத்தில் மழை அதிகமாகப் பெய் தமையினால் அங்கே உண்டான வெள்ளம் அவன் நடக்கும் இடத்திலும் வந்துவிட்டது. வேகமாக வெள்ளம் வரவே, பிரயாணி அதில் அகப்பட்டுக் கொண்டான். வெள்ளத்தின்மேல் மிதந்தான். வெள்ளம் வந்ததனால் நடப்பதற்கும், தலையில் மூட்டை இருந்த தனால் நீச்சல் அடிப்பதற்கும் வழியில்லை. எப்படியோ தட்டுத் தடுமாறித் தண்ணிரின் மேலே மிதந்து கொண்டிருந்தான். அவனிடமிருந்த மூட்டையின் பாரம் வேறு அமிழ்த்துகிறது. அலைமோதி அந்த மூட்டை நனைந்துவிட்டமையினால் அது முன்பு இருந்ததைவிடக் கனமாகத் தெரிகிறது. ஒன்று, அதைத் தூக்கி எறிந்துவிட்டு அவன் நீந்திப் போக வேண்டும்; அல்லது இறந்து போக வேண்டும். அவனோ அந்த மூட்டையை விட மனம் இல்லாமல் பற்றிக் கொண்டே இருக்கிறான். வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வெள்ளத்தின் வழியே அவனும் போகிறான். மரங்களும், விலங்குகளும் அந்த வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. அவன் அவற்றின் மேல் மோதிக்கொள் கிறான். கரை எங்கே இருக்கிறதென்று தெரியவில்லை. இருட்டா கையால் திக்குத் தெரியவில்லை. 'எப்போது விடியும்? எப்போது கரையைக் காண்போம்?' என்று ஏங்கிக் கிடக்கிறான். 299