பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഥങ്ങ് ഥഓi് வரிசைகளாகிய நாமாவளியைப் பெரியோர்கள் அமைத்திருக் கிறார்கள். பதினாறு நாமங்களைக் கொண்ட ஷோடச நாமாவளி, நூற்றெட்டுத் திருப்பெயர்களைக் கொண்ட அஷ்டோத்தர சத நாமாவளி, முந்நூறு நாமங்களைக் கொண்ட திரிசதி, ஆயிர நாமங்களைக் கொண்ட சகசிர நாமாவளி என்று அருச்சனை செய் வதற்காகவே பலவகை நாமாவளிகள் உள்ளன. ஒரு நாமத்துக்கு ஒரு மலராக இட்டு அருச்சிப்பது வழக்கம். இந்த வழக்கத்தைச் சிவபுராணக் கதை ஒன்றினாலும் உணரலாம். திருமால் சிவபெருமானை அருச்சனை செய்யப் புகுந்தார். சகசிர நாமார்ச்சனை செய்ய வேண்டுமென்று சங்கற்பித்துக் கொண்டு ஆயிரம் தாமரை மலர்களைக் கொணர்ந்து வைத்துக் கொண்டு அருச்சனையைத் தொடங்கினார். ஒவ்வொரு நாமத்துக்கும் ஒவ்வொரு பூவாகப் போட்டு வந்தார். கடைசியில் ஒரு பூக் குறைந்தது. கடைசி நாமத்துக்குப் பூ இல்லை. 'அடடா நம் முடைய கணக்குச் சரியாக இல்லாமற் போய்விட்டதே' என்று சிறிது வருந்தினார். அடுத்த கணமே தாமரை மலரைப் போன்ற தம் கண்ணையே பிடுங்கிக் கடைசி மலராக இறைவன் திருவடி யில் அருச்சித்தார். அதனால் மகிழ்ந்த இறைவன் திருமாலுக்குச் சக்கராயுதத்தை வழங்கியருளினானாம். - மலர் ஒன்று நாமம் ஒன்றாக அருச்சனை செய்வது விதி என்பதை இந்த வரலாறு உணர்த்துகிறது. 'பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலர்' என்று அப்பர் சுவாமிகள் கூறுவார். மூன்று கரணங்கள் பூவை மாத்திரம் இறைவன் திருவடியில் தூவுவதால் பயனில்லை என்று இறைவன் நாமத்தையும் சொல்ல வைத்ததில் ஒரு சிறப்பு இருக்கிறது. மனிதனுடைய மூன்று கரணங்களில் கை உடம்போடு சார்ந்தது; அது ஒரு கரணம். வாய் ஒரு கரணம். மற்றொன்று மனம். திரிகரணமும் ஒன்றிச் செய்யும் செயலுக்குத் தான் பயன் உண்டு. கையால் பூவை இட்டு, நாவால் நாமத்தைச் சொல்லி அருச்சிப்பதால் இரண்டு கரணங்களும் ஒன்றுகின்றன. அது மட்டும் போதாது. மூன்றாவது கரணமாகிய மனமும் அருச்சனையில் ஒன்ற வேண்டும். அப்போதுதான் முழுப்பயனும் 19