பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழு கொம்பு வேண்டும்; கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்; கல்வி கற்க வேண்டும். - இப்படி வருகிற சமுதாய வேலைகளுக்குப் பலர் முயன்று பணம் திரட்டி, பல மனிதர்களையும் கூட்டி அந்த அந்த வேலைகளைச் செய்து மக்களை வாழ வைக்கிறார்கள். இவை யாவுமே உலகியல் வாழ்வு. இவற்றில் ஒருவர் மற்றொருவருக்கு உபகாரமாக இருந்து துணை செய்யலாம். ஆன்ம நெறி னால் உயிர் வாழ்வாகிய ஆன்ம நெறியில் தாம் தாமே முயன்ற்ாலொழிய வேறு வகையில் நன்மை பெற இயலாது. தொண்டர் கூட்டத்தில் கலந்து அவர்களுடைய பழக்க வழக்கங்களைத் த்ெரிந்து கொள்வதனால் நமக்கு அறிவு விளக்கம் உண்டாகுமே யொழிய அநுபவம் வாராது. அதற்குச் சொந்த முயற்சி வேண்டும். இதனை முன்பும் பல முறை நாம் நினைவு படுத்திக்கொண்டிருக்கிறோம். உயிர் செல்லுகின்ற பயணத்தில் இந்த உடம்பு இருக்கிற வரைக்கும் சிலர் கூடி ஒன்றுபடலாம். ஆனால் இந்த உடம்பை விட்டு வேறு உடம்பை இந்த உயிர் எடுக்கும்போதும், நரகம் சொர்க்கமாகிய அநுபவங்களைப் பெறும்போதும் இப்போது நமக்கு யார் துணையாக இருக்கிறார்களோ அவர்கள் துணையாக இருக்க முடியாது. ஓரிடத்தில் துணையாக நிற்பவர் மற்றோரிடத்தில் துணையாக நிற்க இயலாது. சாலையில் மோட்டாரில் போகிற வரைக்கும் மோட்டாரோட்டி துணையாக இருப்பார்; ஆற்றில் அவர் துணை பயன்படாது; ஒடம் ஒட்டியின் துணை வேண்டும். எத்தனை பணம் இருந்தாலும், மனிதக் கூட்டு இல்லாமல் எத்தனை காரியங்கள் தடைப்பட்டிருக்கின்றன. அங்கே பணம் இருந்தாலும் மக்கள் இல்லாமையினால் குறை நேருகிறது. மனைவியினால் செய்வதற்குரிய காரியம் சில; மக்களால் செய் வதற்குரிய காரியம் சில; குருவினால் கிடைக்கிற நலம் சில. இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும், ஒவ்வோர் இடத்திற்கும், ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றபடி துணைகள் அமைகின்றன. பெரிய துணை எல்லாக் காலத்துக்கும், எல்லா இடத்திற்கும், எந்த நிலைக் கும் ஒத்தபடி நம்முடைய உயிருக்குத் துணையாக யாரேனும் 31.1