பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழு கொம்பு தன்மையை நன்றாகக் காட்டும் ஞானமாகவும் நிற்பது. அதற்கு மேல் பக்தர்களுக்கு அந்தப் பூங்கழலே மோட்சமாக உதவுவது. எனவே, பற்றிக் கொள்வதற்கும், மேல் ஏறுவதற்கும், மேலே போய்த் தங்குவதற்கும் வெவ்வேறு பொருள்கள் வேண்டாம். எது அடி நிலையில் நாம் பற்றிக் கொள்ளும் பொருளாக நிற்கிறதோ அதுவே நம்மை மேலே ஏற்றும் ஏணியாகவும், அப்பால் படுத்துறங்கும் படுக்கையாகவும் இருக்கிறது. ஆண்டவனுடைய திருத்தாள் மனிதனுடைய தாளைப் போல ஊன் நிரம்பிய பொருளன்று. அது ஒரு தத்துவம். எல்லா வற்றுக்கும் மூலமாக நிற்பது அவன் தாள்தான். எல்லாவற்றுக்கும் முடிவாக நிற்பதும் அது. அந்தப் பொருள் எல்லாவற்றையும் தாங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலே நிற்கிறது. அடி என்ப தற்கு அஸ்திவாரம் என்பது ஒரு பொருள். உலக தத்துவங்களுக்கு எல்லாம் மூலப் பொருளாகவும், அடியாகவும் நிற்பது ஆண்ட வன் திருத்தாள். அது அடியாக மாத்திரம் அன்று; மிக உயர்ந்த பொருளாகவும் நின்று நீண்ட கொம்பாக உதவுகிறது. அதைப் பற்றிக் கொண்டவர்கள் மெல்ல அதன் மேல் ஏறி உயர்ந்த இன்பத்தை அடைவார்கள். மற்றத் துணைகளை நம்பி அவற்றால் உயிருக்கு யாதொரு பயனும் இல்லாமல் சோர்ந்துபோய், என்றைக்கும் துன்பம் இல்லாமல் வாழவைக்கும் துணை எங்கே இருக்கிறதென்று தேடி, மனம் நைந்த பக்தர்களுக்கு, முருகன் திருவடி என்றைக்கும் மாறாத துணையாக வந்து நிற்கும். பிரபஞ்சச் சேறு தள்ளாடி வாடிப் பதைக்கின்ற மனம் மேலே பரந்து நிற்கின்ற பந்தரில் ஏறுவதற்கு ஏற்ற கொழுகொம்பு இல்லாமல் அலைகிறது. பூமியில் வளருகின்ற கொடி கொழுகொம்பில் ஏறிப் பந்தரில் படராவிட்டால் நிலத்தில் படரும். மனம் எப்போதும் அலையும் தன்மை உடையது. ஒரு கணம்கூட நிலைத்து நில்லா தது. ஒரு கணத்தில் பதினாறாயிரம் எண்ணங்களை வளர்த்துக் கொண்டு சுழன்று திரிவது. உயர்ந்த எண்ணங்களை, மேலும் மேலும் நல்ல நிலை அடைவதற்குரிய சாதனைகளை, மனம் கொள்ளாவிட்டால் அது மண்ணோடு மண்ணாக நின்று சேற்றில் அளைந்து, புழுதியில் படர்ந்து, அழுக்கில் துளைந்து, எப்போ 3:17