பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வேண்டிய கொழுகொம்பைத் தானே நட்டுக் கொள்ளாது. கொழு கொம்பு நட்டால் அதனைப் பற்றிக் கொண்டு படரும் ஆற்றல் அதற்கு உண்டு. நாம் மேலே ஏறுவதற்குரிய வழியை நினைக்கச் செய்து, தன் திருத்தாளைக் கொழுகொம்பாக நம்முள்ளத்தில் ஆண்டவனே பதித்து அருள வேண்டும். 'உன்னுடைய காவிக் கமலக் கழலுடன் என்னைச் சேர்த்துக் காத்தருள வேண்டும். கொழுகொம்பில்லாமல் கீழே படர்ந்த கொடி ஆடுமாடுகளால் மிதிக்கப்பட்டுக் குலைவது போல நானும் பிரபஞ்சச் சேற்றிலே மிதியுண்டு அழிந்துவிடுவேன். உன் னுடைய கமலக் கழலாகிய கொழுகொம்பை என் உள்ளத்தில் நாட்டி அருள வேண்டும்" என்று வேண்டுகிறார். காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்; தூவிக் குலமயில் வாகன னே,துணை ஏதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல் பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. மயில் வாகனன் பிரபஞ்சத்தில் படர்ந்து பல வகையான அழுக்கு ஏறியிருக் கிற மனம் ஆண்டவனுடைய கழலாகிய கொழுகொம்பைப் பற்றி மேலே ஏறத் தொடங்கினால் அது பயன் அடையும். மண்ணிலே அது தோற்றியதாக இருந்தாலும் அழுக்குடையதாக இருந்தாலும் இறைவனுடைய கழலின் சார்பு பெற்றுவிட்டால் அதுவே நமக்கு நல்ல கருவியாக, துணையாக நிற்கும். இதற்கு முருகப் பெருமான் வரலாற்றில் ஒரு நல்ல சான்று இருக்கிறது. ஆண்டவனது வாகனம் மயில். இயல்பாகவே பிரணவத்தை மயிலாகக் கொண்டவன் அவன். பிற்காலத்தில் சூரபன்மனோடு போர் செய்து அவனை வென்று, அவனை மயிலாகக் கொண்டு அவன்மேல் ஊர்ந்து வருகிறான். முப்பத்து முக்கோடி தேவர் களுக்கும், நல்லவர்களுக்கும் இடுக்கண் செய்து, ஆயிரத்தெட்டுக் கோடி அண்டங்களுக்குத் தனி நாயகனாக இருந்து ஆண்டு செருக்கு மிக்கு வளர்ந்தவன் சூரபன்மன். நம்மை எதிர்ப்பவர் யார், நமக்கு நிகர் யார் என்று தருக்கி நின்றான் அவன். தேவ்ர் களுக்கு அச்சத்தை விளைவித்த பெரு வல்லமை உடைய அவனை 32O