பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அருணகிரியார் கருணை அருணகிரி நாதர் அநுபூதிமான் என்பதுதான் அவருக்கு உள்ள சிறப்புகளில் தலையானது. மற்றவை யாவும் அதற்கு! பின் வருவனவே. அருளதுபவம் பெற்றதோடு பிறருக்கும் அத்தகைய அநுபவம் உண்டாக வேண்டும் என்ற கருணையும் அவரிடம் நிறைந்திருக்கிறது. அதனால்தான், 'கருணைக்கு அருணகிரி' என்று ஒரு பழம்பாட்டுச் சொல்கிறது. மற்றவர்களிடத்தில் அவருக்கு உள்ள கருணை அளவுக்கு மிஞ்சியது. தாய் தன் குழந்தைக்கு வேண்டிய பொருள்களை யெல்லாம் தருகிறாள். உணவு ஊட்டுகிறாள். உடை உடுத்துகிறாள். தாலாட்டி உறங்கச் செய்கிறாள். நல்ல உபதேசம் செய்கிறாள். இவை யாவும் அவளுடைய பேரன்பைக் காட்டுகின்றன. குழந்தை வளர்ந்து விடுகிறது. பள்ளிக்கூடத்துக்குப் போகும் பையனாக வளர்ந்து விட்டது. ஒரு நாள் அந்தப் பையன் வீட்டில் மைப்புட்டியைக் கொட்டிவிட்டான். அவனுயை தந்தை கோபக்காரர். அது தெரிந்தால் அவனுக்கு உதை கிடைக்கும். இது தெரிந்த தாய் என்ன செய்கிறாள்? அந்தக் குற்றத்தைத் தானே செய்ததாகச் சொல்கிறாள். தன் கணவன் வீட்டுக்கு வரும்போது, 'அந்த மைப்புட்டியை நகர்த்தி வைக்கப் போனேன்; கைதவறிக் கொட்டி விட்டேன்' என்று சொல்கிறாள். அவள் சொல்வது பொய்தான். ஆனால் அது ஒரு நன்மையை விளைவிக்கிறது. பையனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்காமல் காப்பாற்று கிறது. பையன் அறிவாளியாக இருந்தால், தாயின் கருணையை நினைந்து உருகுவான். நாம் செய்த குற்றத்தைத் தான் செய்த தாகச் சொல்லுகிறாளே! என்று வியப்பும் உருக்கமும் கொள் வான்; இனி இத்தகைய குற்றத்தை நாம் செய்யக் கூடாது என்று உறுதி பூண்பான். அந்தத் தாயைப் போன்ற கருணையை உடையவர் அருண கிரிநாதர் நமக்கு எத்தனையோ நல்ல உபதேசங்களைச் செய்கிறார். முருகன் பெருமையை வேறு யாரும் சொல்லாத வகையில் விரிவாக, நம் உள்ளம் உருகும்படி எடுத்துச் சொல்கிறார். அவனைப் பணிந்தால் கிடைக்கும் நன்மை இது என்று பாடு 324