பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LIJ HÜļ lŁJEVJĮf 'காரலர் கடம்பன்: என்பது மணிமேகலை. அது சிவந்த நிறமுடையது. மாணிக்கக் கற்களைத் தங்கக் கட்டிடத்தில் பதிக்கும்போது இடையே சிவப்புத் தகட்டை அமைப்பார்கள். அந்தச் சிவப்புத் தகடு போன்ற செம்மையுடையது கடம்ப மலர். அதைக் கொண்டு முருகனுக்குப் பூசை செய்ய வேண்டும். இன்ன இன்ன தெய்வத்துக்கு இன்ன இன்ன மலர்கள் சிறப்புடையன என்ற வரையறை உண்டு. புட்பவிதி என்று ஒரு நூலே இருக்கிறது. முருகனுக்குத் தகட்டைப் போலச் சிவந்த கடம்ப மலரால் அருச்சனை புரிய வேண்டும் என்று ஆசைப் படுகிறார் அருணகிரியார். முருகனுடைய திருவடிகள் இரண்டுச் கும் அந்த மலரால் அருச்சனை செய்து வழிபட வேண்டுமாம். அவன் அருளால் நமக்கு இயல்பாக உள்ள பாசம் இத்தகைய நல்ல காரியங் கள்ைச் செய்ய ஒட்டாது. இறைவனைப் பணிந்து அவனுடைய பேரருளைப் பெற வேண்டும். அந்தப் பேரருள் கிடைப்பதற்கு முன்பே அவனுடைய அருள் நமக்கு வேண்டியிருக்கிறது. அவன் திரு வடி பணியவும் அவன் திருவருள்துணை செய்தால்தான் முடியும். 'அவனரு ளாலே அவன்தாள் வணங்கி” என்று மாணிக்கவாசகர் பாடவில்லையா? “நின்னைப் பணியுமா பணியே’ என்பது திருவிசைப்பா. அந்த முறையில் அருணகிரியார், "உன் தாளிணைக்கு மலர் சூட்டிப் பணியும் வண்ணம் நீ பணிக்க வேண்டும்' என்று கேட்கிறார். அவனுடைய தாள்கள் இரண்டு. அவற்றில் ஒரு மலரை மட்டும் இட்டால் போதாதாம். இரண்டு மலர்களை இட வேண்டு மாம். கடம்பம் பூவாகிய மலர் ஒன்று, மனமாகிய மலர் ஒன்று. மணமலரும் மனமலரும் இசைந்தால்தான் அது பூசையாகும். திருவடிப் பூசை அவனுடைய அங்கங்களுக்கெல்லாம் பூசை செய்யலாம். அங்க பூசை என்றே ஒரு முறை உண்டு. இறைவனுடைய அங்கங் 6.Qarm.VI-3 21