பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 நன்றாகத் தூங்குவது நல்லது. குழந்தைகளுக்கு இயற்கை யாகவே தூக்கம் வந்துவிடுகிறது; எந்த இடமானாலும் தூங்கிப் போகின்றன; படுக்கையோ, தலையணையோ எதையும் வேண்டு வது இல்லை. நாம் அப்படித் தூங்க முடிவதில்லை. இயற்கை யாகத் தூக்கம் வருகிற நிலையிலிருந்து நெடுந்துாரம் விலகி வந்துவிட்டோம். ஆனாலும் நமக்குத் துக்கம் இன்றியமையாதது. தூக்கம் வந்தால்தான் உடம்பிலும் உள்ளத்திலும் உள்ள சோர்வு போகும். அதற்காக நாம் செயற்கைச் சாதனங்களை மேற்கொள் கிறோம். இயற்கையாக அடைய முடியாததைச் செயற்கையாக அடைய முயல்கிறோம். மெத்தென்ற படுக்கை, தலையணை. திண்டு, மின்விசிறி - இப்படிப் பலவற்றை வைத்துக்கொண்டு நித்திரா தேவிக்கு வரவேற்புக் கூறுகிறோம். இவ்வண்ணமே பற்று அகற்றுவதிலும் செயற்கை முறை உண்டு. இயற்கையாக நம்மிடமிருந்து பற்றுப் போகவில்லை. செயற்கையாக அதைப் போக்க வேண்டும். பற்று அற்றவன் செய்யும் காரியத்தை நாம் செய்து பழக வேண்டும. பற்று அற்ற வன் தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு அளித்துவிடுகிறான். நாமும் அப்படியே கொடுத்துக் கொடுத்து மெல்ல மெல்லப் பற்றைக் குறைத்துக்கொண்டு வர வேண்டும். மனைவியை இழந்துவிட்டு ஒருவன் இருக்கிறான். மனைவியைத் துறந்துவிட்டு ஒருவன் வாழ்கிறான். இயற்கையாக ஞானம் படைத்தவன் மனைவி இல்லாமல் வாழத் தெரிந்து கொண்டிருக்கிறான். மனைவியை இழந்தவனோ முதலில் சில நாள் துன்பத்திற்கு உள்ளானாலும் போகப் போக அந்த நிலை பழகிப்போய், மனைவி இல்லாமலே வாழத் தெரிந்து கொண்டு விடுகிறான். ஒருவனுக்கு இயல்பாகவே பற்று அற்றுப் போகிறது. மற்றொருவனுக்கு அவசியத்தினால் அற்றுப் போகிறது. இரண் டாவதாகச் சொன்னதைத்தான் பற்று அறுவதற்குரிய பயிற்சி அல்லது சாதனம் என்று கொள்ள வேண்டும். 'ஆண்டவனே, தொண்டருடைய கூட்டத்தில் நான் சேர வேண்டுமானால் அவர்களைப் போல நானும் இயற்கையாகப் பணத்தில் பற்று இல்லாதவனாக இருக்க வேண்டும். நான் அத்தகையவன் அல்லன். நான் பற்றிலே அமிழ்ந்தவன். ஆதலால் பற்று அறுவதற்குரிய பயிற்சியைச் செய்து பற்று நீங்கி நிற்க 332