பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை உடம்பை உயிர் வாழும் வீடு என்று சொல்லாமல் சிறை யென்று சொல்வது பொருந்துமா? வீட்டுக்கும் சிறைக்கும் தோற்றத்தில் பலவகை ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் கட்டிடங்களே. இரண்டிலும் கதவும் வாசலும் சன்னலும் அறை களும் சுவர்களும் உண்டு. ஆனால் வீட்டிலே சுதந்தரம் உண்டு. சிறையிலே அது இல்லை. நாம் வேண்டியபோது வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறோம். சிறையிலோ குற்றவாளி யின் விருப்பத்துக்கு மாறாக அவனை உள்ளே தள்ளி வெளியிலே பூட்டுப் போடுகிறார்கள். உடம்பில் வாழ்வதும், இதிலிருந்து போவதும் நம்முடைய கையில் இல்லை. அதற்கு நம்மிடம் சுதந்தரம் இல்லை. இறைவனே நம் வினைக்கு ஏற்ப உடம்பைத் தருகிறான். வினை ஒழிந்தால் விடுதலை செய்கிறான். அதனால்தான் இதைச் சிறை என்றார். சிறையில் இருப்பவனுக்குத் துன்பந்தான் உண்டாகும். இந்த உடம்பில் வாழ்பவர்களுக்கும் துன்பமே கிடைக்கிறது. 'பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்’ என்பது மணிமேகலை. வினைவிலங்கு விட்டவுடன் இந்த உடம்பாகிய சிறை யினின்றும் விடுதலை உண்டாயிற்று. இச்சிறை விடுதலைப் பட்டது. பிறவி அறுதல் இந்தச் சிறை வாழ்வினின்றும் விடுதலை பெறும் பேறு கிடைத்தது. இது தொண்டர் கூட்டத்திற் சார்ந்தமையினால் கிடைத்த இரண்டாவது விளைவு. இந்த உடம்பு போனால் போதுமா? இனி வேறு ஓர் உடம்பிலே புகக் கூடாது. கட்டிப் போட்டிருந்த ஆட்டை அவிழ்த்துவிடுகிறான் ஒருவன். அது விடுதலை பெறுவதாக எண்ணுகிறது. ஆனால் அவிழ்த்து விட்ட வன் அதைக் கசாப்புக் கடைக்கு ஒட்டிச் செல்கிறான். அதை அவிழ்த்துவிட்ட போது அப்போதைக்கு கொண்ட மகிழ்ச்சியி னால் பயன் உண்டோ? அதுபோல இந்த உடம்புச் சிறை யினின்றும் விடுதலை கிடைத்தால் மட்டும் போதாது. எப்போதுமே எந்தச் சிறைக்கும் போகாமல் இருக்க வேண்டும். அதுவே 345