பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் குளிர்ந்தது விருத்த வைத்தியன் என்ற பழமொழியுண்டு. நீண்டகால அநுபவம் உடைய வைத்தியர்கள் மருந்து கொடுத்தால் நோயாளிக்கு நன்மை உண்டாகும். வெறும் வைத்திய நூல் படிப்பு மாத்திரம் இருந்தால் அவனால் நன்மை உண்டாகாது. ஆகையால், கல்வி அறிவோடு அநுபவம் வேண்டு மென்று கருதி விருத்த வைத்தியனாக இருக்க வேண்டுமென்று சொன்னார்கள். உடலுக்கு வரும் நோயைத் தீர்ப்பதற்கு அநுபவ முதிர்ச்சி இருக்க வேண்டும் என்று சொன்னால், அதைவிட அவசியம் உள்ளத்தின் நோயைத் தீர்ப்பதற்குரிய தகுதி. உள்ள மயக்கத்தை நீக்கி ஞானத் தெளிவு அடையச் செய்யும் ஆசிரியர்கள் பல காலம் பல நூல்களைப் பயின்று, பலர் வாயிலாகக் கேள்வி பெற்று, பல சாதனைகளைப் புரிந்து, தம்முடைய அநுபவத்திலும் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி, கேள்வி ஆகிய இரண்டும் அநுபவத்தினால்தான் நிறைவு பெறும். கல்வி, கேள்வி இல் ைத வர்களும் அநுபவத்தினால் சிறந்து நிற்பதைப் பார்க்கிறோம். மகா ஞானியாகத் திகழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்வி கேள்வி மிக்கவர் அல்லர். ஆயினும் அவருடைய அற்புதமான உபதேசங்கள் வேதாந்த உண்மைகளை மிகத் தெளிவாக எடுத் துரைக்கின்றன. அவை அதுபவத்தால் உணர்ந்தவை. ஆகவே ஞானோபதேசத்திற்கு அடிப்படையாக நிற்பது அநுபவம். அந்த அநுபவம் எளிதில் மனிதனுக்கு வராது. பல காலம் சாதனம் செய்து இடையிலே வரும் தடைகளை வென்று வென்று தெளிவு பெற்று அப்பால் பெற வேண்டும். அநுபவம் பெறாதவர்கள் குருவாக இருந்தால் மாணாக்கர்களுக்கு ஐயம் நிகழும்போது அதைத் தீர்க்கும் வன்மை அவர்களுக்கு இராது. அநுபவம் உள்ளவர்களாலேயே எல்லா வகையான ஐயத்தையும் போக்க முடியும். அநுபவம் என்பது பல கால முயற்சியின் பய னாக வருவது. அதனால் சிறந்த ஆசிரியர்கள் பலகாலம் சாதனை செய்தவர்களாக, வயசில் மிகுந்தவர்களாக இருப்பது இயற்கை. தெய்விகக் குருநாதர் இது உலக இயலோடு ஒட்டிய குருமார்களுக்கு அமைந்தது. ஆனால் தெய்விகக் குருநாதர்களுக்கு இந்த விதி ஒவ்வாது. தட்சிணாமூர்த்தியைக் குருமூர்த்தி என்று சொல்வார்கள். பொது 363