பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வாகக் குரு என்று சொன்னால் அது தட்சிணாமூர்த்தியைத் தான் குறிக்கும். தட்சிணாமூர்த்தியைப் பற்றி ஒரு சுலோகம் வட மொழியில் உண்டு. ஆல மரத்தினடியில் தேசு நிறைந்த திருமுகத்துடன் தென்முகக் கடவுள் வீற்றிருக்கிறார். அவருக்குக் கீழ் நான்கு மாணாக்கர்கள் அமர்ந்திருக்கிறார்கள். என்ன ஆச்சரியம் குருநாதர் இளையவராக இருக்கிறார்; மாணாக்கர்கள் கிழவர்களாக இருக்கிறார்கள் என்று அந்தச் சுலோகம் சொல் கிறது. உலக இயலுக்கு மேற்பட்ட அநுபவத்தில் சிறந்த முனி வர்கள் மாணாக்கர்களாகவும் இளமையுடைய தட்சிணாமூர்த்தி குருநாதனாகவும் இருப்பதைக் காண்கிறோம். தோற்றத்தில் தட்சி ணாமூர்த்தி இளமை உடையவரானாலும் அவர் காலம் கடந்த பேராளர். அவர் தோற்றத்தில் இளமையுடையவர்; அநாதி கால மாக இளமையோடு இருக்கிறவர் அவர். குமர குருபரன் அத்தகையவனே முருகப் பெருமானும். அவன் பின்னும் இளமையுடையவன். சின்னஞ்சிறு வடிவுடன் மெய்ஞ்ஞான உபதேசம் செய்கின்ற குருமூர்த்தி. குருநாதர்களுக்குள் சிறந்த குருநாதன். ஆகையால் அவனைக் குருபரன் என்று சொல்வார் கள். பரன் என்பது மேலானவன் என்னும் பொருளை உடையது. எல்லாக் குருநாதர்களுக்கும் மேலான குருநாதனாகையால் அவன் அந்தத் திருநாமத்தைப் பெற்றான். குமர குருபரன் என்று நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தக் குமர குருபரனே அருணகிரியாருக்கு உபதேசம் செய்தான். பிராயத்தில் முதிர்ந்த குருநாதர்கள் நிதானமாக மெல்ல மெல்ல உபதேசம் செய்வார் கள். அவர்கள் மாணாக்கனை நோக்கி வரும்போது நிதானமாக வருவார்கள். இங்கே குழந்தைக் குருநாதனாகிய முருகன் அருண கிரியார் திருவுள்ளத்தில் கருணை வேகத்தோடு வந்து குதித்தா னாம். அவனுடைய திருவுருவம் எளிதிலே உள்ளத்தில் வந்து நின்றதாம். குருவடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குதிகொண்டவே என்று பாடுகிறார். 364