பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் குளிர்ந்தது முன்பு சொன்னபடி, பாடலைப் படிப்பவர்கள் உறுப்பைச் சுட்டும் சொற்கள் வரும்போதெல்லாம் அந்த அந்த அங்கத்தை மனத்தில் நிறுத்தித் தியானம் பண்ண வேண்டும். திருவடியும், தண்டையும் என்று சொல்லும்போது நமக்கு அவை அகக் கண்ணில் வரவேண்டும். தண்டையின் ஒலியும், சிலம்பின் ஒலியும் காதில் கேட்க வேண்டும். இப்படி நிறுத்திப் பயின்றால் இந்தப் பாடல் நம் மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்ய உதவும் என்பது உறுதி. - 大 திருவடி யும்தண்டை யும்.சிலம் பும்சிலம்பு ஊடுருவப் பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும் மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும் குருவடி வாய்வந்தென் உள்ளம் குளிரக் குதிகொண்டவே. (முருகப்பெருமானுடைய திருவடிகளும், அவற்றில் அணிந்த தண்டையும் சிலம்பும், கிரெளஞ்சமாகிய மலையை உள்ளே புகுந்து உருவும்படி போர் செய்த கூர்மையான வேலும், கடம்ப மாலையும், விசாலமான தோள்கள் பன்னிரண்டும், மணத்தையுடைய வடிவமாக உள்ள திருமுகங்கள் ஆறும், தாமரை போன்ற கண்களும் ஒன்றுபட்டுக் குருவடிவாக எழுந்தருளி அடியேனது உள்ளம் தாபங்கள் அற்று அமைதியான குளிர்ச்சியைப் பெறும்படியாக வந்து குதித்தன. பொரு - போர் செய்யும்) முருகனுடைய திருவுருவத் தியானம் செய்யச் செய்ய அவனே குருவாகி வந்து உண்மையை உணர்த்தியருளினான் என்பது கருத்து. 375