பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் இராப்பகல் அற்ற இடங்காட்டி யான்இருந் தேதுதிக்கக் குராப்புனை தண்டையந் தாள்.அரு ளாய்கரி கூப்பிட்டநாள் கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும் பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே. இது இறைவனுடைய தியானத்தில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை உடையவர்களுக்குச் சொல்கிற பாட்டு. அவர்களே பக வானிடத்தில் சொல்லி வேண்டிக் கொள்வது போல அருணகிரி நாத சுவாமிகள் இந்தப் பாட்டை அமைத்திருக்கிறார். தராசின் நிலை எம்பெருமானுடைய திருவுருவத் தியானம் செய்வதானால் மனத்திற்கு ஒரு பக்குவம் வேண்டும். தராசின் நிலைபோல அந்தப் பக்குவம் இருக்கும். தராசில் இரண்டு பக்கமும் தட்டுகள் இருக்கும். நுட்பமான பொருள்களை நிறுக்க வேண்டுமானால் நுட்பமான தராசில் நிறுக்கிறோம். தங்கம் வைரம் முதலிய வற்றைச் சின்ன தராசில் வைத்து நிறுப்பார்கள். நிறுப்பதற்கு முன்னால் தராசைத் தூக்கிப் பார்ப்பார்கள். அது சமமாக இருக் கிறதா என்று தெரிந்து கொண்ட பிறகே நிறுக்கத் தொடங்கு வார்கள். இதை வள்ளுவர் சொல்கிறார்; 'சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்’’ என்று உவமையில் வைத்து அந்த வழக்கத்தைக் காட்டுகிறார். போட்ட பொருளின் எடையைச் சரியானபடி காட்ட வேண்டுமா னால் எடையைப் போடுவதற்கு முன்பு தராசைத் தூக்கினால் இரண்டு பக்கத்துத் தட்டும் சமமாக இருக்க வேண்டும். முதலில் சமமாக இருக்கிறதா என்று பார்த்த பிறகே பொருளையும் எடையையும் போட்டு நிறுப்பார்கள். அதுபோல் இறைவனுடைய திருவருளை நம் உள்ளத்தில் தாங்கிக் கொள்ள வேண்டுமானால் நம்முடைய உள்ளம் நடுநிலையில் இருக்க வேண்டும். பிற பொருள்களை நாடி அலைந்து கொண்டிருந்தால் இறைவனுடைய உருவத்தைப் பதித்துக் கொள்ள முடியாது. சுவரும் சித்திரமும் அழுக்கு அடைந்த சுவரில் சித்திரங்களைத் தீட்ட முடியாது. ஒவியர்கள் முதலில் சுவர் முழுவதும் சுண்ணாம்பு அடிப்பார்கள். 377