பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 சுவர் ஒரே வெள்ளையாக ஆன பிறகு அதில் தாம் எழுத வேண்டிய வண்ணச் சித்திரங்களை எழுதுவார்கள். நம்முடைய மனமாகிய சுவரில் இறைவனுடைய திருவுருவத்தை எழுத வேண்டுமானால் முதலில் அங்குள்ள அழுக்கைப் போக்கிக் கொள்ள வேண்டும். 'துணிவெளுக்க மண்உண்டு எங்கள் முத்து மாரியம்மா தோல்வெளுக்கச் சாம்பல்உண்டு எங்கள் முத்து மாரியம்மா மணிவெளுக்கச் சாணையுண்டு எங்கள் முத்து மாரியம்மா மனம்வெளுக்க வழியில்லை எங்கள் முத்து மாரியம்மா” என்று சொல்வார் பாரதியார். நம்முடைய மனத்தில் எத்தனையோ நிறங்கள் ஏறியிருக்கின்றன. சிவப்பும், கறுப்பும் நடமாடிக் கொண் டிருக்கின்றன. சிலருடைய மனத்தில் பச்சைவண்ணம் நிரம்பி யிருக்கும். மனத்தில் தோன்றுகிற எண்ணங்களுக்கு வண்ணம் உண்டென்று மேல் நாட்டினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைப் பற்றி விவரமான புத்தகம் ஒன்றை அடையாற்றில் வெளியிட் டிருக்கிறார்கள். மனம் வண்ணங்கள் நிறைந்ததாக இருந்தால் புதிய சித்திரத்தை எழுத முடியாது. எழுதினாலும் மங்கிப் போய்விடும். ஆதலால் முதலில் மனத்தை எந்த வண்ணமும் இல்லாமல் சுத்த சத்துவமாக அமையும்படி வெள்ளை அடிக்க வேண்டும். வெள்ளை அடிப்பதாவது என்ன? மனம் விருப்பு வெறுப்பு இல்லாமல், எதனையும் சாராமல் அமைதியாக, மெளனமாக, நடுநிலையில் இருக்க வேண்டும். சுகமும் துக்கமும் இப்போது நம்முடைய மனம் சுகம் வந்தால் துள்ளிக் குதிக்கிறது; துக்கம் வந்தால் சோர்ந்து விடுகிறது. ஒரு நாள் மிகவும் உற்சாகமாகவும், மற்றொரு நாள் மிகவும் வாட்டமாக வும் இருக்கிறோம். இப்படி இருப்பதற்குக் காரணம் மனந்தான். சுகமும் துக்கமும் மாறி மாறி வரும் உலகத்தில் நம்முடைய 378