பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தூக்கம், விழிப்பு இரண்டும் ஒன்றுதான். தூக்க நிலையைக் கேவ லம் என்றும், விழிப்பு நிலையைச் சகலம் என்றும் சொல்வார் கள். அவர்கள் இந்த இரண்டு அவஸ்தைகளையும் கடந்தவர்கள். தூக்கத்தில் எப்படி இந்திரியங்கள் எல்லாம் அடங்கி நாம் தூங்கு கிறோமோ அப்படி அவர்கள் விழித்துக் கொண்டிருக்கும்போது இருக்கிறார்கள். விழித்திருந்தாலும் அவர்கள் மனம் அலையாது. அவர்களுக்குத் தூக்கமும் இல்லை; விழிப்பும் இல்லை. இரவும் இல்லை; பகலும் இல்லை. அறிவு, அறியாமை என்ற இரண்டு வேறுபாடுகள் நம்மிடத் தில் இருக்கின்றன. இந்திரியங்களால் ஒன்றை அறிந்து கொள்வது கூட ஒரு வகை அறிவுதான். அறிவும் அறியாமையும் அற்ற இடத்தில் இருப்பவர்கள் பெரியவர்கள். 'அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே' என்று கந்தர் அநுபூதியில் அருணகிரியார் பாடுகிறார். அறிவு என்பது சகலம்; அறியாமை என்பது கேவலம். அறிவு என்பது பகல்; அறியாமை என்பது இரவு. அறிவு என்பது தெளிவு: அறியாமை என்பது மயக்கம். இந்த இரண்டும் இல்லாத நடு நிலை இரவும், பகலும் அற்ற நிலை. அந்த நடு நிலையில்தான் மனம் அடங்கி இருக்கும். கடவுளுடைய திருவுருவம் நன்றாகப் பதியும். அத்தகைய இடம் ஒன்றை எனக்குக் காட்டி, தியானம் பலிக்கும்படியாகச் செய்ய வேண்டும் என்ற விண்ணப்பத்தை அருணகிரியார் சொல்கிறார். இராப்பகல் அற்ற இடம் காட்டி யான் இருந்தே துதிக்கக் குராப்புனை தண்டையந் தாள் அருளாய். இரண்டு விதத் தடை தி யானம் பண்ண உட்கார்ந்தால் நமக்கு இரண்டுவிதமான தடைகள் வரும். பெரும்பாலான தடை புறத்திலிருந்து வருவது. பூசை பண்ண உட்காருவான். வாசலில் செருப்புத் தைக்கிறவன் பேசுகிற பேச்சும், உள்ளே குழந்தை விளையாடுகிற விளை யாட்டு ஒலியும், அழுகைச் சத்தமும் வந்து பாதிக்கும். அது ஏன், இது ஏன் என்று கேட்டுக் கொண்டே ஜபம் செய்வான். புறத் திலிருந்து வருகிற ஒலிகள் நம்முடைய மன ஒருமைப் பாட்டைக் 384