பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் அது போற்றும்படி செய்து உலகத்திற்குக் கருணை புரிந்து நிலை நிற்கிற கடவுள் திருமால். அக் கரி போற்ற நின்ற கடவுள். கசேந்திரன் வரலாறு அந்த யானை எது தெரியுமா? பாண்டி நாட்டில் திருமா லிடத்தில் பக்தி உடையவனாக இந்திரத்யும்நன் என்ற அரசன் இருந்தான். அவன் அகத்தியர் சாபத்தால் யானையானான். ஒவ் வொரு நாளும் ஆயிரம் தாமரையைப் பறித்து வந்து திருமாலை வழிபடும் வழக்கம் உடையது அந்த யானை. அதற்குத் திருமாலை வழிபட வேண்டுமென்ற அறிவு இருந்தது. அதனை முதலை பற்றிக் கொண்டவுடன் திருமாலை எண்ணி ஆதி மூலமே என்று கூப்பிட்டது. அப்போது திருமால் ஓடி வந்தார். முதலையைச் சங்கரித்து யானையை மீட்டார். முதலையின் வாயிலிருந்து விடுதலை பெற்ற யானை திருமாலைத் தோத்திரம் செய்தது. இப்படி ஆபத்தில் இருந்த யானையைக் காத்து அது செய்த துதிகளைக் கேட்டுப் பெருமையோடு நிற்கிறவர் திருமால். "அவ்வளவு பெருமையுடைய திருமாலே மெச்சும்படி யாக விளங்குகிறவன் எங்களுடைய வேலாயுதக் கடவுள்' என்று சொல்கிறார் அருணகிரியார். கரி கூப்பிட்ட நாள் கராப்படக் கொன்றுஅக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும் பராக்ரம வேல! படியின் மேற்படி இங்கே அருணகிரியார் திருமாலின் புகழை இவ்வளவு சொல்கிறாரே; ஏன்? ஒருவனை லட்சாதிபதி என்று சொல்கி றோம். அதனால் அவன் புகழ் தெரிகிறது. அவன் பெருமையை முதலில் சொல்லிவிட்டு, 'அவனைவிட இவன் பணக்காரன்' என்று இவனைச் சுட்டினால் பின்னும் இவன் பெருமை விட்டு விளங்கும். ஒரு பொருளின் உயர்வை மிகவும் எடுத்துச் சொல்லி, அதைவிட உயர்ந்தது இது என்றால் பின்னதன் உயர்வைச் சொல் லாமலே தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையான உத்தி. கம்பர் இந்த உத்தியைப் பல இடங்களில் ஆளுகிறார். கோசலை 391