பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணாரக் காணும் காட்சி யிலும் தோற்றும். அப்படித் தோற்றும் தோற்றத்தை உருவெளித் தோற்றம் என்று புலவர்கள் சொல்வார்கள். அகத்தில் உள்ள காதல் மிகுதியாக ஆக அகத்தில் தோற்றும் தோற்றமே புறத் திலும் வந்து தோற்றுமாம். நாம்கூடச் சில சமயங்களில் சிலவகையான காட்சிகளைக் காணுகிறோம். சுவரில் ஏதாவது ஒரு மூளி இருந்தால் அந்த இடம் ஒட்டகமாகத் தோன்றும்; பெண் மாதிரித் தோன்றும். மற்றவர் களுக்கு அது தோன்றாது. ஓரிடத்தில் அழுக்குப் படிந்திருக்கும்; வட்டமாக இருக்கும். அதில் கண், காது, மூக்கு எல்லாம் நன்றாகத் தோன்றும்; ஒரு சித்திரம் போலவே தோற்றமளிக்கும். எல்லோருக்கும் அது தோன்றாது. நம்முடைய மனோபாவமே அப்படிக் காண்பதற்குரிய காரணம். காதல் மிகுந்தவர்களுக்கு உருவெளித் தோற்றம் தோன்றும் என்பதைப் பழைய இலக்கியங்கள் சொல்கின்றன. இணை பிரியாமல் வாழ்ந்த காதலனும், காதலியும் ஒருவரையொருவர் உருவெளியில் பார்க்கிறார்கள். காதலன் பொருளைத் தேடிக் கொண்டு போகிறான். அந்தக் காலத்தில் பிரிவினால் இரண்டு பேரும் வாடுவார்கள். காதலன் காதலியை நினைப்பான். காதலி காதலனை நினைப்பாள். அப்படி நினைக்கும்போது அவரவர் களுக்கு மற்றவரது உருவம் வெளியில் தோன்றுமாம். மனோ பாவம் யாரோ ஒருவரை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். வீதியில் நெடுந்துரம் நம் பார்வையைச் செலுத்திக் கொண்டிருப் போம். யாரோ ஒருவர் வந்து கொண்டிருப்பார். அவருடைய தோற்றம் நாம் பார்க்கிற ஆசாமியே என்று நினைக்கும்படியாக இருக்கும். ஆனால் பக்கத்தில் வந்தால் உண்மை புலனாகும். நாம் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமோ அவருடைய பாவம் நம் மனத்தில் உறைந்திருப்பதனால் நாம் நெடுந்தூரத்தில் பார்க்கிறவரை நம்முடைய அன்பராகக் காண்கின்ற நிலை உண் டாகிறது. மனத்தில் உள்ள பாவந்தான் அதற்குக் காரணம். அது போலவே பரிபூரண அன்பு இருக்குமானால் ஒன்றும் இல்லாத இடத்திலும் நம்முடைய அன்புக்குப் பாத்திரமானவருடைய 397