பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 ஆவாகனம் பண்ணிப் பூசைபண்ணுவது பழங்கால முதல் உள்ள வழக்கம். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் முருகனுடைய திருக்கோயிலை வேற்கோட்டம் என்று குறிப்பிடுகிறார். வேலையே முருகனாக வைத்துக் கும்பிடும் வழக்கத்தை அது காட்டுகிறது. இன்றும் யாழ்ப்பாணத்தில் சில கோயில்களில் வேலை நட்டு முருகனாக வழிபட்டு வருகிறார்கள். இப்படி எம்பெருமானுக்குச் சின்னமாக இருக்கும் ஞான சொரூபமாகிய வேலை, சிவந்த நிறத்தையுடைய வேலை, எளிதில் தியானப் பொருளாக நினைத்தால் அது உள்ளத்தில் வந்து தோன்றும். அந்த வேலைப் பற்றிக் கொண்டால் முருகனுடைய திருக்கோலம் தொடர்ந்து காட்சியளிக்கும். இவற்றை எல்லாம் நன்கு உணர்த்துவார்போன்று, புறத்தில் தோன்றும் காட்சியில் முதலில் தோற்றுவது வேல் என்று சொல்கிறார். செங்கேழ் அடுத்த சினவடி வேலும் திருமுகம் முதலியன பின்பு தோன்றுவது எது? முருகப்பெருமான் திருமுகம் தோன்றுகிறதாம். . திருமுகமும். எம்பெருமான் ஆறு திருமுகம் உடையவன். அவை தோன்று கின்றன. அந்த முகங்களுக்கு இரண்டு பக்கமும் வரிசையாக உள்ள பன்னிரண்டு தோள்களும் தோன்றுகின்றன. பங்கே நிரைத்தநல் பன்னிரு தோளும்எம்பெருமானுடைய வேல் தோன்றுகிறது. ஆறு முகங்களும் தோன்றுகின்றன. பின்பு பன்னிரு தோள்களும் தோன்றுகின்றன. "எங்கே நினைப்பினும் இவைகள் எல்லாம் தோன்றுகின்றன" என்கிறார். செங்கோட்டு வேலன் அருணகிரிநாத சுவாமிகளுக்குத் திருச்செங்கோட்டு வேல னிடம் தனி அன்பு உண்டு. இதனை முன்பும் பல முறை பார்த் திருக்கிறோம். எந்தத் தலத்தையும் நினைக்காத அநுபூதியில் 4O2