பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 நாடுவோம். வீட்டிலே தக்க இடத்தில் அமர்ந்து சுவையான உணவை உண்ணும் ஒருவன் கடுமையான வேலையில் ஈடுபட்டு வீட்டுக்குப் போக முடிவதில்லையானால், தான் பணிபுரியும் அந்த இடத்திற்குச் சோற்றை வருவித்து உண்ணுகிறான். வண்டி யில் பயணம் செய்கிறவன் வண்டி ஒடும்போதே ஏதாவது வாங்கி உண்ணுகிறான். ஒட்டத்தில் இருக்கிறவன் ஒடும்போதே எதை யாவது கிடைத்ததைக் கொண்டு வயிற்றை நிரப்புகிறான். மற்றக் காரியங்களில் ஈடுபடுகிறபோது உண்ண வேண்டிய அவசியம் இல்லையென்று அதை ஒதுக்க முடியாது. எப்படியாவது உண்ணு வதற்கும், உறங்குவதற்கும் நேரத்தைக் கண்டுபிடித்துக் கொள் கிறான். உண்ணுவது முயற்சியினாலே வருவது; உறங்குவது தானே வந்துவிடுகிறது. இறைவனைத் துதிப்பதற்கும், தியானம் செய்வதற்கும் ஒருவனுக்கு உண்மையான சிரத்தை இருந்தால் எந்த நிலையிலும் உணவைப் போகிற இடத்தில் பெற்று உண்ணு வது போல அவற்றைச் செய்துவிடுவான். அப்படிச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் மற்றப் பொருள்களில் வைத்த பற்றுத்தான். பற்று வைத்தவன் சிறிதே உணர்வு வந்தபோது, எந்தப் பக்கம் வந்தாலும் அவன் வெளியே வர முடியாதபடி அந்தப் பற்று அவனுக்குத் தடையாக இருப்பதைக் காண்கிறான். இடப்பக்கம் போனால் மனைவி வந்து நிற்கிறாள். வலப் பக்கம் போனால் மக்கள் வந்து நிற்கிறார்கள். இவர்களுக்கு வேண்டிய வற்றைச் செய்வதையே கடமையாகத் தீரமானித்துக் கொண்டிருக் கிறான். அதனால் இறைவனைத் தியானிக்கும் கடமையைச் சற்றே தள்ளி வைக்கப் பார்க்கிறான். இப்படியேதான் பொழுது போய்க் கொண்டிருக்கிறது. துணிவு இல்லாமல், பற்றின பற்றை நழுவ விடுவதற்குரிய தைரியம் இல்லாமல், எந்த நிமிஷத்திலும் தனியாக வந்து அமர்ந்து கொள்வதற்குரிய பழக்கம் இல்லாமல் திண்டாடுகிறான். இருதலைக் கொள்ளி எறும்பு இதற்கு எதையாவது உவமை சொல்லலாமே இருதலைக் கொள்ளிக்கு இடையில் அகப்பட்ட எறும்பு திண்டாடுவது போல நாம் திண்டாடுகிறோம். இருதலைக் கொள்ளி எறும்பு போல என்பது ஒரு பழமொழி. இரண்டு பக்கமும் தீ எரிந்து 422