பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதலைக் கொள்ளி எறும்பு கொண்டிருக்கும் கொள்ளியினிடையே அகப்பட்ட எறும்பு எந்தப் பக்கமும் போக முடியாது. கீழே குதித்து விடலாம். ஆனால் ஒரு மூங்கிலில் இரண்டு பக்கமும் தீப் பிடித்துவிடுகிறது. அந்த மூங்கிலுக்குள்ளே ஓர் எறும்பு அகப்பட்டுக் கொள்கிறது. அப் போது இரண்டு பக்கத்திலும் போக முடியாது; தீ இருக்கிறது. வெளியில் குதிக்கவும் முடியாது; சுற்றிலும் மூங்கில் குழாய் இருக்கிறது. அந்த எறும்பு உய்வதற்கு வழியே இல்லை. அப்படித் தான் நம்முடைய பற்றுக்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். முத்தொள்ளாயிரப் பாடல் இருதலைக் கொள்ளியினுள் அகப்பட்ட எறும்பைப் பல புலவர்கள் எடுத்து ஆளுகிறார்கள். முத்தொள்ளாயிரம் என்ற நூலில் ஒரு தலைவி தன் நிலையைப் பற்றிச் சொல்லுகிறாள். சோழன்மேல் காதல் கொண்டவள் அவள். அவனுடைய பேரழகைக் கண்டு தன் உள்ளத்தை இழந்தாள். அவனிடம் நேரே சென்று தன் காதலைச் சொல்லலாம் என்றாலோ நாணம் வந்து தடுக்கிறது. அவனை அடைந்து இன்புறா விட்டாலோ பெண்மைக்குரிய நலம் அழிந்து போய்விடும். இப்படி இரண்டு பக்கத்திலும் அவ ளுக்குச் சங்கடம் இருக்கிறது. எதையும் செய்ய முடியாமல் திண் டாடுகிறாள். இரவு முழுவதும் இருதலைக் கொள்ளி எறும்பு போலவே இரண்டு தலையிலும் உள்ள துன்பத்தை எண்ணி அவள் நெஞ்சு சுழலுகிறது. இரண்டு தலைப்பிலும் கொள்ளியாக இருக்கும் மூங்கில் குழாய்க்குள் அகப்பட்ட எறும்புபோலத் தன்னுடைய நெஞ்சம் அங்கும் இங்கும் போய்த் திறந்த வழி காணாமல் திண்டாடுகிறதாக அவள் சொல்கிறாள். "நாண்ஒருபால் வாங்க நலன்ஒருபால் உள்நெகிழ்ப்பக் காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற - யாமத்து இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத் திரிதரும் பேருமென் நெஞ்சு.' மணிவாசகர் வாக்கு - இந்த உவமையையே மணிவாசகப் பெருமான் ஆளுகிறார். இறைவனைப் பிரிந்து பிரபஞ்சம் என்னும் சேற்றுக்குள் சுழன்று எந்தப் பக்கமும் போய் விடுதலையைப் பெற முடியாமல் 423