பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதலைக் கொள்ளி எறும்பு தது நமக்குத் தைரியம் ஊட்டுகின்ற செயல். வீரத்தினால் சிறப்புப் பெற்ற செந்தூர் ஆண்டவன், காதலுடைய வள்ளிக்கு மணவாளனாகி, மயில்மேல் ஏறி ஒளி வீச வருகிறான். மயி லேறிய மாணிக்கமாக விளங்குகிறான். அவனுடைய திருக் கோலம் அவனுடைய வெற்றிச் சிறப்பையும் காதல் சிறப்பையும் பேரழகையும் காட்டுகிறது. கடல் செந்தில் மேவிய சேவகனே! வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே! மாணிக்கம் மாணிக்கம் தானே ஒளி வீசும்; அது சுயம்பிரகாசமானது. ஆண்டவன் என்றைக்கும் மாறாத தேசு உடையவன். அவன் செக்கச் செவேல் என்று இருக்கிறான். மாணிக்கம் பச்சையின் நடுவில் இருந்தால் பின்னும் ஒளி விட்டு விளங்கும். இங்கே முருகப் பெருமான் பசுந்தோகை மயில்மேல் ஏறி வருகிறான். மரகதத்தில் மாணிக்கம் பதித்தது போல இருக்கிறது அந்தக் காட்சி. மயிலேறிய மாணிக்கமாக அவனைப் பார்க்கும்போது அவன் அழகு நம் கண்ணை விட்டு மறைந்துவிடாமல் நம் மனத்திலும் நிற்கிறது. அந்தப் பெருமானைப் பார்த்து, ‘எம்பெருமானே, என் உள்ளத் துயரை ஒழித்தருள வேண்டும்' என்று வேண்டுகிறார் அருணை முனிவர். பல அலைகள் மோதினாலும் திண்மையான அலைவாயில் திருக்கோயில் கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்கிறான். அதுபோல் அவன் திருவடியைப் பற்றிக் கொண்டால் ஆயிரம் ஆயிரம் துயர் அலைகள் வந்து மனத்தில் மோதினாலும் சற்றும் தளர்ச்சி அடையாமல் இருக்கலாம். இந்த இரண்டையும் ஒருங்கே நினைத்து இணைத்ததைப் போல இந்தப் பாட்டைப் பாடுகிறார். ★ கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்என்றன் உள்ளத் துயரை ஒழித்துஅரு ளாய்ஒரு கோடிமுத்தம் 431