பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அது. "ஆறு மகவன் வேலும், அஞ்சேல் என்ற திருக்கரமும் எனக்கு மெய்த்துணை. ஆகவே நான் காலனுக்கும் அஞ்சமாட்டேன்' என்று அருணகிரிநாதர் இந்தப் பாடலில் சொல்ல வருகிறார். பயத்திற்குக் காரணமான காலனை வருணிக்கிறார். அஞ்சு வதற்குரிய ஆயுதங்களும், உருவமும் அவனிடம் இருக்கின்றன. அவன் சூலத்தை ஏந்தி வருகிறான். கள்ளனுக்குப் பயந்து ஓடி ஒளித்துக் கொள்ளலாம். காவலனுக்கும் பயந்து ஒடி ஒளித்துக் கொள்ளலாம். ஆனால் யமனுக்குப் பயந்து ஒடி ஒளித்துக்கொள்ள முடியாது. காற்றுக்குள் நுட்பமாக நுழைந்தாலும் அவன் அங்கே வந்து சேருவான். இப்படி நம்மைத் தொடர்ந்து வருகின்ற காலனுக்குப் பயப்படாத நிலை இறைவனுடைய திருவருளால் தான் உண்டாகும். "நான் காலனுக்கு அஞ்சமாட்டேன்' என்று அருணகிரி நாதர் சொல்கிறார். சூலம் பிடித்து எமயாசம் சுழற்றித் தொடர்ந்துவரும் காலன்தனக்கு ஒரு காலும் அஞ்சேன். முன்பும் சூலத்தையும், பாசத்தையும் அருணகிரிநாதர் நினைப் பூட்டியிருக்கிறார். சூலத்தினால் குத்தி, பாசத்தினால் இறுக்கிக் கட்டிக்கொண்டு போகிறானாம். இறந்து போகின்றவன் துடிதுடித்து வாயில் நுரை கொப்புளிக்க, கண் பிதுங்க அவஸ்தைப்படுவதைப் பார்த்து, எமன் சூலத்தால் குத்தி, கயிற்றினால் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுக்கிறான் என்ற உருவகம் உண்டாயிற்று என்று தோன்றுகிறது. எப்படியானாலும் மரணத்துக்கு மூலகாரணமாக உள்ள சக்தியைக் காலன் என்று சொன்னார்கள். அதற்குச் சிறிதும் அஞ்சாமல், திருவருளைத் துணையாகக் கொண்டவர்கள் இருப்பார்கள். அஞ்சாமைக்குக் காரணம் அருணகிரி நாத சுவாமிகள் அந்தத் தைரியத்தைக் கொண்ட வர். காலனுக்கு அஞ்சேன் என்று சொன்ன பிறகு அதற்குரிய காரணம் இன்னது என்று சொல்ல வருகிறார். மற்ற இடையூறு கள் வரும்போது உலகியல் உள்ளவற்றைத் துணையாகக் கொள்ள முயல்கிறோம். அவை எல்லாம் மெய்த் துணையாக இல்லாமல் பொய்த் துணையாக மாறிவிடுகின்றன. அப்படியின்றி, பெரிய துன்பமாகிய மரண பயத்தைப் போக்குவதற்கு மெய்யான துணை 433