பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்த்துணை எனக்கு இருக்கிறது என்று சொல்கிறார். முருகப்பெருமானுடைய வேலும், அஞ்சேல் என்ற திருக்கரமும் மெய்த்துணையாக உள்ளன வாம். சூலமும், பாசமும் ஆகிய இரண்டையும் கொண்டுவரும் காலனுக்கு எதிரே வேலும், திருக்கரமும் ஆகிய இரண்டும் உதவு கின்றனவாம். ஆலம் குடித்த பெருமான் முருகனைப் பற்றிச் சொல்லும்போது அவன் சிவகுமாரன் என்று சொல்கிறார். யமனாவது ஒவ்வோர் உயிரையும் தனித் தனியே வேறு வேறு காலத்தில் கொண்டு போகிறான். அன்று ஒரு நாள் பாற்கடலில் ஒரு பெரிய யமன் போன்ற பொருள் எழுந்தது. அதுதான் ஆலகால விஷம். அமுதத்தை உண்டு சாவாமல் வாழலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த தேவர்களுக்கு முன் அவர்களின் உயிரை ஒருங்கே குடிக்கும் நஞ்சு எழுந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களின் உயிரையும் ஒருங்கே போக்கும் வகையில் அது எழுந்தது. அந்தச் சமயத்தில் அந்த நஞ்சைச் சிவபெருமான் எடுத்து விழுங்கிவிட்டான். முருகப் பெருமான் அவனுடைய குமாரன். அந்தக் குடும்பம் முழுவதுமே உயிரைக் கொள்ளை கொள்ளும் பொருள்களை விழுங்கும் பேராற்றல் உடையது என்பதை இப்படிக் குறிப்பிடுகிறார். சிவன் நஞ்சை விழுங்கினான்; முருகன் யமனையே விழுங்கிவிடுவான். அறுமுகவன் 'பாற்கடலில் அன்று எழுந்த விஷத்தைக் குடித்த சிவ பெருமானுடைய குமாரன் இத்தகைய துணிவை எனக்குத் தரு கிறான்' என்று அருணகிரியார் சொல்கிறார். அவன் ஆறுமுகம் உடையவன். எந்தப் பக்கத்திலிருந்து எனக்குத் துன்பம் வந்தா லும் அந்தப் பக்கத்திலிருந்து எதிர்த்து எனக்கு நலம் செய்கின்ற வன். நான்கு திசைகளும், மேல் கீழ் என்ற திசைகளும் சேர்ந்து எப்படித் துன்பம் வந்தாலும், அந்தத் திசையை நோக்கியுள்ள அவனது திருமுகம் எனக்கு வரும் துன்பத்தை நீக்கிவிடும்’ என்று நினைக்கும்படியாக அறுமுகவன் என்று சொல்கிறார். கடல்மீது எழுந்த ஆலம் குடித்த பெருமான் குமாரன், அறுமுகவன் 439