பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கண்டையை எடுத்துக் காலுக்கு அணிந்து கொள்கிறான். ஒற்றை காலில் முழங்காலுக்குக் கீழே அணிந்து கொள்வது வீர கண்டை. கழல் என்று தமிழில் பெயர் வழங்கும். வளை போன்று இருந்தா லும் அதில் ஒரு மணி தொங்கும். கண்டை என்பது மணி. நடக் கும் போது அந்த மணி ஒலிக்கும். போரில் வெற்றி பெற்றவர்கள் அந்த வெற்றிக்கு அறிகுறியாகக் கழலை அணிந்து கொள்வார்கள். இறுக்கமாக இல்லாமல் கழல்வது ஆதலின் கழல் என்ற பெயர் வந்தது போலும். கழலை அணிந்தமையினால் திருவடியையே கழல் என்று சொல்வது உண்டு. அது ஆகுபெயர். இங்கே முருகப் பெருமான் தன்னுடைய திருவடியில் அழகிய கழலைக் கட்டிக் கொள்கிறான். அந்தக் கழலில் பூ வேலை செய்திருக்கிறார்கள். அது பூங்கழல்; அவன் எந்தப் போரை இப் போது செய்திருக்கிறான்? அவனுக்கு வந்த வெற்றி என்ன? இதற்கு முன் செய்த ஒரு வெற்றிக்காக அவன் பூங் கழலைக் கட்டிக் கொள்ளவில்லை. இனிமேல் நிகழப் போகும் போரை எண்ணி இந்தக் கழலைக் கட்டிக் கொள்கிறானாம். அருணகிரியாரின் கற்பனை அப்படி ஒடுகிறது. வீரர்களின் உறுதி உலகில் பெரு மன்னர்கள் தம்முடைய எதிரியின் படை களை அழித்து ஒடுக்க வேண்டுமானால் பலகாலம் அதற்கென்று படை தேடிக் கொள்வார்கள். இயற்கையாகத் தமக்குள்ள படை களோடு கூலி கொடுத்துப் புதிய படைகளையும் சேர்ப்பார்கள். வேறு மன்னர்களையும் துணைக்கு அழைத்து, அவர்களுடைய உதவியையும் ஏற்றுக் கொள்வார்கள். படைத் தலைவர்களுக்குச் சிறப்பு செய்து பலவகைப் படைக்கலன்களையும் குவித்துக் கொள்வார்கள். இத்தனை ஏற்பாடுகளையும் செய்துகொண்டு அவர்கள் போருக்குப் புறப்பட்டுச் சென்றாலும் இடையில் பல தடங்கல்கள் உண்டாகும். இறுதியாகத் தமக்குத்தான் வெற்றி கிடைக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதில்லை. இயல்பாக உள்ள வீரத்தினால் மிடுக்கு இருக்குமேயொழிய, எந்தச் சமயத்தில் வெற்றி யார் பக்கம் சாயும் என்ற நிச்சயம் அவர்களுக்கு இராது. 32