பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் கருவிகளால் வெவ்வேறு ஒலியாக வருகின்றன. இவைகள் எல்லாம் சொல்லின் ஒலியைப் பொறுத்த அமைப்புகள். மனிதன் உள்ளத்தில் நினைந்ததைச் சொல்லிலே சொல்லும் ஆற்றல் பெற்றிருக்கிறான். இது மிக அருமையாக வந்த ஒன்று. அருமையாகக் கிடைத்ததை நல்ல பயன் உள்ள காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும். பொற்கிண்ணம் ஒருவனுக்குக் கிடைத் தால் அதைப் போற்றிப் பாதுகாத்து அதில் பாலும் சோறும் இட்டு உண்பான்; அல்லது உயர்ந்த விலைக்கு விற்பான். அப்படியின்றி ஒரு சிறு குழந்தையின் கையில் அதைக் கொடுத்தால் பக்கத்து விட்டுப் பையனுடன் விளையாடும்போது கோபம் வந்தால் அந்தக் கிண்ண்த்தைத் தூக்கி எறியும். ஆண்டவன் திருவருட் பெருமையை நான் நன்கு தெரிந்து கொள்ளவில்லையென்று புலப்படுத்த வந்த மணிவாசகப் பெருமான். 'மழக் கையிலங்குபொற் கிண்ண மென்றலால் அரியை என்றுனைக் கருது கின்றிலேன்' என்று சொல்கிறார். நமக்குக் கிடைத்த வாக்கு அல்லது பேச்சைப் பொற்கிண்ணத்தைப் போல, மாணிக்கத்தைப் போலப் பாதுகாக்க வேண்டும். அவைகளையாவது பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மனிதப் பிறவி வாய்த்தும் ஊமையாகப் போய்விட்டால் அவன் பேச்சைப் பெறுவது இயலாத காரியம். இனி அடுத்த பிறவியில் பெற்றால்தான். இவ்வாறு அருமை யாகக் கிடைத்த பேச்சை மிகச் சிறந்த பயன் உடையதாகவும், புண்ணியம் தருவதாகவும் செய்ய வேண்டும். பெரியவர்கள் திருவாக்கு தினந்தோறும் பேசுகின்ற பேச்சே இப்படி இருக்க வேண்டு மென்று ஆன்றோர்கள் போதித்திருக்கிறார்கள். பல காலத்திற்குப் நிற்கின்ற சொற்களைச் சொல்லுகின்ற பெரியவர்கள் இருக்கிறா கள். அவர்கள் பேசியவற்றைத்தான் இன்றைக்கு உபதேசமாக வும், நல்லுரையாகவும் கொள்கிறோம். ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் திருவாக்காக இன்று கிடைத்திருப்பன திருமுறை கள். பெரியவர்கள் பாடிய பாடல்களை அவர்களுடைய திரு வாக்கு என்று சொல்கிறோம். திருவாசகம், திருவாய்மொழி என்ற 443