பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 போன்ற சாமான்ய ஆசாமி. விபூதியை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று விபூதிப் பையை அவரிடம் நீட்டினேன். அவர், "இல்லை, இல்லை; உங்கள் கையினால் கொடுங்கள். அப்போதுதான் எனக்குத் திருப்தியாக இருக்கும்” என்று சொன் னார். "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன். 'உங்கள் கையினால் வாங்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. காரணம் இருக்கிறது, சொல்கிறேன். முதலில் கொடுங்கள் என்றார். அவர் விருப்பப்படியே அவருக்குத் திருநீறு கொடுத்து, பையைச் சுருட்டி வைத்துக் கொண்டேன்; 'என்ன சொல்ல வருகிறீர்கள்?' என்று கேட்டேன். "அது பெரிய விஷயம்; கேளுங்கள்' என்று அவர் ஆரம்பித்தார். "நாம் காட்டின் வழியே வரும்போது கார் மிகமிக வேகமாக வந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று அவர் கேட்டார். 'கார் எங்கும் நிற்காமல் நல்ல வேகத்துடன் வந்ததாகத்தான் எனக்குத் தோன்றியது' என்றேன். -- 'நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் இவ்வளவு வேகத்தில் எப்போதும் காரைவிட்டது இல்லை. அவசியமும் நேர்ந்தது இல்லை. இன்றோ உயிருக்குப் பயந்து இத்தனை வேகத்தில் விட்டேன்' என்று அவர் சொன்னார். அப்படிச் சான்னவுடன் தான் ஏதோ அபாய நிகழ்ச்சி நிகழ்ந் திருக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன். 'இரண்டு இடங்களில் வந்த ஆபத்தினின்றும் நீங்கி நாம் உயிர் பிழைத்தோம். அதற்குக் காரணம் நீங்களே' என்று அவர் சொன்னார். - அப்போதும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. 'சொல்லுங் கள்' என்றேன். - "நான் பொலன்னருவாவிலேயே சொன்னேன்; அங்கே தங்கி விட்டு விடியற்காலையில் போகலாம் என்றேன். இவர்கள் கேட்க 46O.