பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாபப் புரவியும் தனிவேலும் தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளம்;தனிவேல் வாங்கி அனுப்பிடக் குன்றங்கள் எட்டும் வழிவிட்டவே. (இயக்கம் இன்றித் தேக்கத்தைப் பெற்ற தேவலோகத்தில் இருந்த தேவர்கள் சிறையை விட்டு விடுதலை பெறும்படியாகத் தன் சிறிய அடி யில் பூவேலை செய்த வீரக்கழலைக் கட்டும் பெருமாளாகிய முருகனது வாகனமாகிய மயில் தன்மேலே அவனைச் சுமந்து நடைபோட, சூர னுடைய படை குலைந்தது; முருகன் தன் ஒப்பற்ற வேலை எடுத்து விட எட்டுக் குலாசலங்களும் வழிவிட்டன. தேங்கிய - ஓடாமல் நின்ற, தேங்கிய இமையோர் என்றும் கூட்ட லாம். அண்டம் - தேவருலகம். பெருமாளுடைய கலாபப் புரவி, கலாபம் - தோகை, மிசை - தன்மேலே. அவனைத் தாங்கி என்று செய்யப்படு பொருளை வருவித்துப் பொருள் கொள்ள வேண்டும். முறிந்தது - கட்டுக் குலைந்தது. தளம் - படை. தனி - ஒப்பற்ற வாங்கி - எடுத்து; பிரயோகம் செய்து என்றும் பொருள் கொள்ளலாம்; வேல் வாங்குதல் என்றும் கூறுதல் மரபு; 'வேல் வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே என்று அலங்காரத்தில் முன்னே வந்திருக்கிறது. அனுப்பிட அனுப்புதல் என்னும் சொல் புதிதாக வந்தது. அதை அருணகிரியார் ஆள்கிறார். 'அப்பாலோர் வண்டை அனுப்பின் அவர் காமம், செப்பாதே என்றால் திகைக்குமே" என்பது தமிழ்விடு தூது. குன்றங்கள் எட்டும் பிறழ்ந்து சிதைந்து வழிவிட்டன. புரவி நடப்பத் தளம் முறிந்தது; வேல் அனுப்ப எட்டும் வழி விட்டவே என்று வினைமுடிவு செய்க.) இது கந்தர் அலங்காரத்தில் 83 - ஆம் பாடல். 41