பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மான பெளதிக வலிமை. மற்றொன்று ஆன்மிக சக்தியின் பலம்: என்று எழுதியிருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தில் வாழ்க்கையில் பல பல துறைகளில் ஈடுபட்டிருக்கும் பெரியவர்கள், ஆண்டவன் பால் கொண்ட நம்பிக்கையால் தமக்குக் கிடைத்த அநுபவங் களைச் சொல்லியிருக்கிறார்கள். மிகவும் சுருக்கமாகவும், ஆனால் தெளிவாகவும் எழுதியிருக்கிறார்கள். சினிமா நடிகர்கள், நகர சபைத் தலைவர்கள், உயர்தர நீதிமன்ற நீதிபதிகள் முதலிய பலர் எழுதியிருப்பதனால் அவற்றை நாம் நம்பலாம். இறைவனை நம்பியமையினால் எதிர்பாராத வகையில் தங்களுக்கு நலம் கிடைத்ததைப் பற்றிய நிகழ்ச்சிகளை அவர்கள் எழுதியவற்றில் காணலாம். சில உதாரணங்களைச் சொல்லுகிறேன். வக்கீலின் அநுபவம் ஹைக்கோர்ட் ஜட்ஜாக இப்போது இருக்கிறவர் ஒருவர் தாம் வக்கீலாக இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றைச் சொல் கிறார். அவர் வக்கீலாக இருந்தபோது அவரது குடும்பத்திற்கு மிகவும் உதவியாய் இருந்த நீக்ரோக்களின் வழி வந்த இரண்டு சிறுவர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டதாம். வக்கீலின் உறவினர் ஒருவர், "அப்பா, இவர்கள் நம் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருந்தவர்கள். எந்தத் தவறான வழிக்கும் போக மாட்டார்கள். இவர்களுக்குப் பிரதிகூலமான சூழ்நிலையை வைத்துக் கொண்டு இவர்கள் மேல் கொலைக் குற்றம் சாட்டி யிருக்கிறார்கள். இவர்கள் கொலை செய்யவில்லை. இதை நிரூ பிக்கப் போதுமான சாட்சி இல்லை. ஆனாலும் இவர்கள் நிர பராதிகள். இந்த வழக்கை நீ நடத்தி இவர்களைக் குற்றத்தினின் 2. It was just six years ago, in a world of intellectual and materialistic 'isms' back in 1945, that the atom bomb was produced. With it, man had achieved a way of destroying himself. Also six years ago, in a little room over a small - town grocery store in upstate New York, a small monthly publication was born called GUIDE POSTS. Its purpose - to bring light to drakened areas of the world. The bomb filled the world with fear, while the publication from its inconspicuous inception was a voice of hope. - Foreword to New Guide PostS, 46