பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வெளிப்படும். தென்னை மரத்தை நட்டுப் பத்து ஆண்டுக்குப் பிறகு பயன் தரத் தொடங்கினால் அது நெடுங்காலம் வாழும். நேற்றுக் காலையில் விதைத்த கீரையை ஒரு மாதத்திற்குள் சயைல் பண்ணிச் சாப்பிடலாம். விரைவிலே பயன் கிடைக்கிற காரியங்கள் நெடுநாள் நில்லா. நமக்குக் கிடைக்கும் பயன்கள் எத்தனைக்கு எத்தனை எளிதில், விரைவில் கிடைக்கின்றனவோ அவ்வளவு எளிதில் விரைவில் அவற்றைத் தரும் பொருள் போய்விடும். நினைத்த மாத்திரத்தில் பலர் எழுதுகிறார்கள்; சிந்திக்காமல் எழுதுகிறார்கள். அந்த எழுத்துப் பலகாலம் நிற்பது இல்லை. ஆனால் திருவள்ளுவர் குறளை இயற்றினார். அவர் நிச்சயமாகப் பலகாலம் சிந்தித்துத்தான் அதை எழுதி இருக்க வேண்டும். அவருடைய சிந்தனையின் உரம் அந்த நூல் நெடுங் காலம் வாழ்வதினின்றும் தெரிகிறது. எளிதில் பயன் தருவன நெடுநாள் நில்லா, அரிதில் பயன்கொடுப்பன நெடுநாள் நிற்கும் என்பது பொது நியதி. எளிதிலே பயன் ஆனால் அருணகிரிநாதர் சொல்கிற அற்புதம் வேறு வகையில் இருக்கிறது. ஆண்டவனுடைய திருவருள் எளிதில் கிடைக்கும். அதனை யார் உண்மையாக நம்புகிறார்களோ அவர் களுக்கு எளிதில் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் பயன் நெடுங் காலம் நிற்கும்; நித்தியமாகவே நிற்கும். இவ்வளவு எளிதா என்று தோன்றும். அதற்கு முன் அரியது ஒன்று இருக்கிறது. நாம் முருகப் பெருமானை உறுதியாக நம்புவது என்பது எளிதில் உண் டாவதில்லை. அதற்கு எத்தனையோ பிறவிகள் எடுக்கவேண்டு மென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இந்தப் பிறவியில் உறுதியாக நம்பிவிட்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், அந்த உறுதியான நம்பிக்கைக்குப் பல பிறவி களிலே தொடர்ந்து பயின்றிருக்க வேண்டும். பல தடைகளைக் கடந்து தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாக வேண்டும்' என்று மணிவாசகர் பாடுகிறார். அவற்றை எல்லாம் நாம் இப்போது பிரத்தியட்சமாகக் காண்பது இல்லை. நாம் காண்பது இப்போது நிகழ்கிற நிகழ்ச்சி தான். ஆகையால் அதைக்கொண்டு பார்த்தால், இறைவனை 54