பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பிறருக்கு வரும் தீங்கைத் தன்னைச் சரணாகதி அடைந்த மாத்திரத்தில் போக்குகின்ற கருணாகரன் சிவபெருமான். அவ னுடைய பிள்ளை எப்படி இருப்பான்? 'முருகா' என்று வாழ்த் தினாலே போதும்; தன்னுடைய கருணையை ஈவான். இந்த எண்ணங்களை எல்லாம் வைத்துக் கொண்டு, மைவரும் கண்டத்தர் மைந்த! என்று அருணகிரியார் வாழ்த்தினார். பின்பு, கந்தா! என்று சொல்கிறார். கந்தன் கந்தன் என்ற திருநாமத்தைப் பற்றி நாம் பலமுறையும் பார்த்து இருக்கிறோம். மிக்க இன்பத்தைத் தருகிறவன் கந்தன் என்று வடமொழியாளர் கூறுவர். உலகத்தில் எப்போதும் கவலை யினால் கலக்கம் அடையும் மக்களுக்கு முருகனுடைய நினைவு உண்டானால் கலக்கம் தீர்ந்து துன்பம் நீங்கி அமைதியும் இன்ப மும் உண்டாகும். இன்பத்தைத் தரும் காரணத்தினால், மக்க ளுடைய உள்ளத்தை மகிழ்ச்சி அடையச் செய்யும் காரணத்தி னால், கந்தன் என்ற திருநாமத்தைப் பெற்றான் என்று சொல் வார்கள். "துன்பத்தை நீக்கும் சிவபெருமானுடைய பிள்ளையே, இன்பத்தை ஆக்குபவனே என்று முருகப் பெருமானை வாழ்த் தினார் அருணகிரியார். மைவரும் கண்டத்தர் மைந்த, கந்தா! என்ற இரண்டு நாமங்களும் அந்தக் குறிப்புப் புலனாகும்படி செய்கின்றன. 'நான் கைமேல் பலன் அளிக்கும் இந்தத் தொண்டைத் தவிர வேறு ஒன்றையும் செய்து அறியேன். ஆண்டவனே, எனக்கு இது தா, அது தா என்றுகூடக் கேட்கவில்லை. அவனுடைய திரு நாமங்களை உறுதியான நம்பிக்கையுடன் நினைந்து வாழ்த்தி னேன். அதனால் கைமேல் பலன் கிடைத்தது. மற்றவர்கள் என்ன என்னவோ செய்வதாகச் சொல்லி ஏமாந்து நிற்கிறார்கள். காவி உடுத்தும் தாழ்சடை வைத்தும் காடுகள் புக்கும் தடுமாறுகிறார் 58