பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு கள். காயம் ஒறுத்தும் காய்கனி துய்த்தும் காசினி முற்றும் திரிகிறார்கள். அவற்றை எல்லாம் நான் செய்யவில்லை. அவனை வாழ்த்துகின்ற ஒன்றை மாத்திரம் விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தேன். அது எனக்குக் கைவரும் தொண்டாகப் பயன் தந்தது என்று நாம் விரிவாகப் பொருள் கொள்ளும்படியாக அருணகிரியார் பாடுகிறார். 1 விண்ணப்பம் இனி அடுத்தபடியாக முருகப் பெருமானிடத்தில் ஒரு விண்ணப்பத்தைச் செய்து கொள்கிறார். கற்ற கல்வியும் போய்ப் பைவரும் கேளும் பதியும் கதறப் பழகி நிற்கும் ஐவரும் கைவிட்டு மெய்விடும்போது உன் அடைக்கலமே. 'ஆண்டவனே, நான் இப்போதே சொல்லி வைக்கிறேன்; "இன்ஷாரன்ஸ் செய்கிறேன். என்னுடைய உடம்பை நான் விடும்போது நீதான் அடைக்கலம். இனிமேல் நான் இறந்து பிறக்கிற துன்பம் எனக்கு இல்லை. இப்பொழுதே நான் நல்வாழ்வு வாழ்கிறேன். இப்போது வாழ்கின்ற வாழ்க்கை எப்படி உண்மையோ அதுபோல நான் இறந்துபடும்போது நீ காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கையும் உண்டு. அதனால் உண்மை யாக நீதான் அடைக்கலம் என்று சொல்கிறேன். இம்மையில் உன்னுடைய திருவருளால் பெறுகின்ற இன்ப வாழ்க்கையைப் பார்க்கும்போது நிச்சயமாக மறுமையில் நீ என்னைப் பாதுகாப் பாய் என்ற உறுதிப்பாடு உண்டு' என்ற எண்ணத்தோடு அவர் பாடுகிறார். துணையால் வரும் உறுதி இந்த வாழ்க்கையில் ஆண்டவனை நினைக்காமல் வேறு பலவற்றை நினைக்கிறவர்கள் தக்கபடி வாழ்வது இல்லை. உடம் போடு உயிர் ஒட்டி இருப்பது வாழ்வு என்று சொல்ல முடியாது. தேகம் உறுதியாக இருந்தால்தான் நன்றாக வாழ முடியும். மனமும் உறுதியாக இருக்க வேண்டும். 59