பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு மெல்ல மெல்ல நம்மிடமிருந்து நழுவப் பார்க்கின்றன. மூப்புற்றுச் சாக்காடு வருவது இயற்கை. மூப்பு வரும்போதே சாக்காட்டுக்கு முதல் மணி அடித்தாகி விடுகிறது. அப்பொதுதே காது கேட்ப தில்லை. கண் பார்வையை இழந்துவிடுகிறது. இந்திரியங்கள் ஐந்தும் மெல்ல மெல்லப் பற்றுவிட்டுக் கழலத் தொடங்குகின்றன. 'தொண்டு கிழவன் இவன்.ஆர் எனஇருமல் கிண்கி ணெனம னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு - செவியாகி' என்று திருப்புகழில் இந்த அவல நிலையைப் பாடுவார் அருண கிரியார். நம் வாழ்க்கையில் உறவினரும் நண்பரும் மனம் மாறினால் நம்மை விட்டுப் பிரிந்து போகலாம். நம் மனைவி கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குப் போகலாம். புதல்வன் நம்மைவிட்டுப் பிரிந்துபோய் வாழலாம். ஆனால் நம் கண் காது முதலியவை அத்தகையன அல்ல. 'இனி உன்னிடம் இருக்க மாட்டேன்; வேறு ஒருவனிடம் போய் விடுகிறேன்' என்று பிரிந்து போக முடியாது. இப்படிப் பிரிவின்றிப் பழகி நிற்கும் ஐந்து இந்திரியங் களும் உயிர் உடம்பில் இருக்கும்போதே, மரணம் வருவதற்கு முன், கைவிட்டு விடுகின்றன. பழக நிற்கும், ஐவரும் கைவிட்டு. மெய்விடும்போது பிறகு உயிர் உடம்பை விட்டே போய்விடுகிறது. வீட்டைக் காலி பண்ணுகிறவர் தம் பண்டங்களை ஒவ்வொன்றாக வெளி யேற்றி விட்டுக் கடைசியில் தாம் புறப்படுவது போல, ஐந்து இந்திரியங்களும் நழுவிய பிறகு உயிரும் உடம்பை விட்டுப் போய்விடுகிறது. ஐவரும் கைவிட்டு மெய்விடும்போது. அந்தச் சமயத்தில் புறத்தே நின்று நமக்கு உதவி செய்த கிளைஞரும் நண்பரும் ஊரினரும் உயிருக்கு ஒன்றும் செய்ய முடியாது; ஐந்து இந்திரியங்களாலும் ஏதும் செய்ய இயலாது. அப்போது ஒரே ஒரு துணைதான் உண்டு. அவன்தான் இறைவன். 65